கொரோனா வைரஸ் தலைவிரித்தாடும் இந்த நேரம் மனிதனாய் பிறந்த எல்லோருக்குமே போதாத காலமாய் போய் இருக்கிறது. எங்கு கேட்டாலும், பசி, சாப்பாடு, மருத்துவ உதவி போன்ற அழுகுரல்கள் சில நாட்களாக கேட்க ஆரம்பித்துள்ளது.
சில தன்னார்வலர்கள் உதவி வருகின்றனர். திரைப்பட நடிகர் யோகிபாபுவும் இது போல காவல் காக்கும் போலிசுக்கு என் 95 மாஸ்க் மற்றும் சக்திபானங்கள் வழங்கி வருகிறார்.
பெண்காவலர்களுக்கு கழிப்பிட வசதி செய்து கொடுக்குமாறும் அவர் போலீசை வேண்டியுள்ளார்.