இந்த கொரோனா வந்தாலும் வந்தது ஒவ்வொருவரும் விவேக்கை கிண்டலடித்து வருகின்றனர். நேற்று ஒருவர் எங்க தல விவேக் மாப்பிள்ளை படத்தில் எப்பவோ கொரோனா ஸ்டைலை கொண்டு வந்து விட்டார்னு சொன்னார் அதையும் விவேக் கலாய்த்திருந்தார்.
இந்த நிலையில் ஒரு செய்தி இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது. இதுதான் அந்த செய்தி
#டெல்லியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான காதலன் காதலிக்கு சிகிச்சை…
போலீஸ் விசாரித்ததில் அந்த #காதலிக்கு மேலும் 3 காதலன்கள் இருப்பது தெரிந்து அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்…
அந்த #மூன்று காதலன்களில் ஒருவருக்கு இரண்டு காதலிகள் இருப்பது தெரியவந்து அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்…
அந்த 2 காதலிகளில் ஒருவரின் போனில் நிறைய ஆண்கள் அழைப்புகள் இருப்பதால் வழக்கு CB CID க்கு மாற்றம்.. இப்படி ஒரு செய்தி வந்த நிலையில் அந்த செய்தி வந்த வீடியோவையும் விவேக்கின் பழைய காமெடியையும் கோர்த்து விட்டு மீம்ஸ் ஒன்றை தயார் செய்துள்ளனர். இதை பார்த்த விவேக்,
அட பாவிங்களா !!காதலர்களா!!ஏதோ காமெடிக்கு பண்னுனத இப்படி உண்மை ஆக்காதீங்கடா!என கலாய்த்துள்ளார்