கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு எல்லா நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா என்ற கொடிய வைரஸால் பலர் வாழ்வு இழந்து உள்ள நிலையில் தேவையில்லாத அராஜக சம்பவங்களும் நடந்து வருகிறது.
ஏற்கனவே நடந்து வரும் இயற்கை அழிப்பு அநியாயங்களால் தான் இறைவனால் சபிக்கப்பட்டது போல் கொரோனா போன்ற நிகழ்வுகள் நடந்து மனிதனின் அழிவுக்கு காரணமாகியுள்ளது. ஆனால் இதையும் புரிந்து கொள்ளாத மனிதன் தொடர்ந்து தவறு செய்கிறான்.
உலகின் புகழ்பெற்ற காடு என்று அழைக்கப்படுவது பிரேஸிலில் உள்ள அமேசான் காடு. இங்கு இல்லாத பறவைகள், மூலிகைகள் போன்றவையே இல்லை என்னுமளவுக்கு அதிகம் உள்ளன.
புகழ்பெற்ற இக்காட்டை தற்போதைய கொரோனா ஊரடங்கு சூழலை பயன்படுத்தி அங்குள்ள பல லட்சம் மரங்களை டன் டன்னாக கார்ப்பரேட் நிறுவனங்கள் வெட்டி கடத்தி விட்டனராம்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 64 சதவிகித மரங்களை வெட்டி கடத்தியுள்ளதாம் கார்ப்பரேட் நிறுவனங்கள்.
எத்தனை கொரோனா வந்தாலும் மனிதன் கொடூர பண ஆசையில் திருந்தபோவது இல்லை என்பது உண்மை.