சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் சென்னையின் முக்கிய தியேட்டர் இந்த படத்துடன் மூடப்படுவதாகவும் அதன் பின்னர் இடித்து அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட இருப்பதாகவும் கூறப்படுவது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அசோக் நகரில் உள்ள உதயம் தியேட்டர் காம்ப்ளக்ஸ் பல ஆண்டுகளாக ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்த இடம் என்பதும் இங்கு தான் பல பிரபலங்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உதயம் தியேட்டர் காம்ப்ளக்ஸ் விற்பனை செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் இந்த தியேட்டர் கட்டிடம் இடிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல் படி ’வேட்டையன்’ திரைப்படம் தான் இந்த தியேட்டரில் வெளியாகும் கடைசி திரைப்படம் என்று கூறப்படும் நிலையில் இந்த செய்தியை தியேட்டர் நிர்வாகம் மறுத்துள்ளது. ’வேட்டையன்’ திரைப்படத்திற்கு பிறகு தீபாவளிக்கு ரிலீசாக அமரன் திரைப்படத்தை ரிலீஸ் செய்கிறோம் என்றும் தியேட்டரை இடிக்கிறோமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தியேட்டர் நிர்வாகத்தின் தரப்பில் கூறப்படுகிறது.
இப்போதைக்கு இடிக்கப்படவில்லை என்றாலும் கூடிய விரைவில் இந்த கட்டிடம் இடிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பாக மாற உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.