#BREAKING நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் – செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு!

Published:

மாமல்லபுரத்தில் கார் விபத்து நடந்த வழக்கில் ஆஜராகாத நிலையில், நடிகை யாஷிகா ஆனந்திக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மார்ச் 25 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் அவரை கைது செய்ய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் படி செங்கல்பட்டு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

ஜீவா – காஜல் அகர்வால் நடித்த கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இதையடுத்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் 2-வது சீசனில் பங்கேற்று பிரபலமடைந்தார்.

இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு நண்பர்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில் காரில் வேகமாக சென்றபோது, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு பகுதியில் உள்ள சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்ததில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்தார். இதில் யாஷிகா ஆனந்தின் நெருங்கிய தோழியான பவானி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக உயிர் சேதம் ஏற்படுத்தியது, வேகமாக கார் ஓட்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் யாஷிகா ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.

எனவே மார்ச் 25 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் அவரை கைது செய்ய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் படி செங்கல்பட்டு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

மேலும் உங்களுக்காக...