சந்திரமுகி 2 படத்தில் இந்த ஸ்டார் ஹீரோயினுமா? சக்க போடு போடும் லாரன்ஸ்!

Published:

சூப்பர் ஸ்டாரான ரஜினி நடிப்பில் 2005 ஆண்டு பி.வாசு இயக்கத்தில் உருவான படம் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் 17 ஆண்டுகள் கழிந்து சந்திரமுகி 2 என்கிற பெயரில் இயக்குனர் பி.வாசு இயக்குகிறார். சந்திரமுகி 2 படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் வடிவேலு, ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயுள்ளனர்.இப்படத்தில் கதாநாயகியாக லட்சுமிமேனன் தான் நடிகையுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.குச்சுப்புடி நடன கலைஞரான லட்சுமி மேனன் சந்திரமுகி 2 படத்தில் நடிக்கயுள்ளார்.

மேலும் இந்த படத்தில் மொத்தம் ஐந்து கதாநாயகிகள் நடிக்கின்றனர் என்றும் அதில் நடிகை மகிமா நம்பியார் ஒருவர் .என கூறப்படுகிறது.படத்திற்கு பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார். ‘பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.

santhi

ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியது. இந்நிலையில் ‘சந்திரமுகி 2’ படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

குழந்தைகளுக்காக வழக்கத்தை மாற்றிய நயன்தாரா! அப்படி என்ன நடந்திருக்கும்!

இந்நிலையில் மேலும் ஒரு சிறப்பு தகவலாக படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.இவர் தான் சந்திரமுகி என்ற கேள்வியும் சினிமா வட்டாரங்களிடையே எழுந்துள்ளது.

இது குறித்து இன்னும் உறுதியான தகவல் வெளியாக வில்லை, நடிகை கங்கனா தமிழில் தூம், தலைவி போன்ற படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment