குழந்தைகளுக்காக வழக்கத்தை மாற்றிய நயன்தாரா! அப்படி என்ன நடந்திருக்கும்!

தமிழ் சினிமாவில் பிரபல காதல் ஜோடியான இயக்குனர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா ஜோடி சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் ஜீன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

புதிய அம்மாவான நயன்தாரா அக்டோபர் 9 ஆம் தேதி தனது இரட்டை மகன்கள் பிறந்ததில் இருந்து சமூக வலைத்தளங்களில் வருகை குறையத்துடங்கியுள்ளது.நயன் பிஸியாக இருந்தபோதிலும் அவர்களுடன் நேரத்தை செலவிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தகவல் தெரிவிக்கின்றன.

லேடி சூப்பர் ஸ்டாருக்கு நவம்பர் 18 ஆம் தேதி 38 வயதாகிறது, மேலும் அவர் இந்த முறை வித்தியாசமான கொண்டாட்டத்தை கொண்டாட உள்ளதாக தகவல் வந்துள்ளது. கடந்த சில வருடங்களாக நயன் தனது பிறந்தநாளை கணவர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டில் கொண்டாடி வருகிறார்.

இந்த முறை தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும், அவர்களுடன் வீட்டில் பெரிய நாளை கொண்டாடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வாத்தி படத்தின் பாடல் – தனுஷ் மற்றும் ஜிவி வெளியிட்ட மாஸ் அப்டேட்!

திருமணத்திற்குப் பிறகு முதல் பிறந்த நாள் மற்றும் அவரது குழந்தைகளுடன் பிரபல ஜோடி தங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை தங்கள் வீட்டிற்கு அழைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். அவரது மற்றொரு பெண் மையப் படமான ‘கனெக்ட்’ முடிவடையும் தருவாயில் உள்ளது. விக்னேஷ் சிவன் அஜீத் நடிக்கும் ‘ஏகே 62’ படத்தை இந்த ஆண்டு இறுதியிலிருந்து எடுக்கத் தயாராகி வருகிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment