விஜய்யின் லியோ படத்திற்க்கு சென்சார் குழு வைத்த ஆப்பு! அதிர்ச்சியில் லோகேஷ்!

Published:

தளபதி விஜய் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கலுக்கு பிரம்மாண்டமாக வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து தற்பொழுது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். மாஸ்டர் பட வெற்றி கூட்டணியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக இணைந்து லியோ படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் அடுத்தமாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யுடன் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். பான் இந்திய திரைப்படமாக உருவாகும் லியோ படத்தில் 20க்கும் மேற்பட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பின் பெரும் பகுதி காஸ்மீரில் நடந்துள்ளது.

மேலும் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் தேதி குறித்த எந்த அப்டேட்களும் வெளியாக வில்லை. தளபதியின் லியோ படத்தின் ரிலீசிற்கு ஆவலுடன் காத்திருக்கும் ரசிகருக்கு இசையமைப்பாளர் அனிருத் மாஸ் அப்டேட்டை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதில் இன்னும் ஒரு வாரத்தில் லியோ படத்தின் இரண்டாவது சிங்கள் வெளியாகும் என கூறியுள்ளார்.

அசோக்செல்வனுக்கு டும் டும் டும்! மாஸான ஜோடி பொருத்தம்!

இந்நிலையில் லியோ படத்தின் போஸ்ட் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சமயத்தில் லியோ படத்திற்கு சென்சார் குழு சில தடைகளை விதித்துள்ளது. பொதுவாக இயக்குநர் லோகேஷ் படங்கள் எந்த அளவுக்கு மாபெரும் வெற்றி அடைகிறதோ அதைவிட அதிகமான அதிரடியான காட்சிகள் அந்த படத்தில் இடம் பெற்றிருக்கும்.

லோகேஷின் முதல் படமான மாநகரம் படத்தில் தொடக்கி இரண்டாவது படமான கைதி படத்திலும், மூன்றாவது படமான மாஸ்டர் படத்திலும் அதிரடி சண்டை காட்சிகள் அதிகமாக இருக்கும், அதிலும் நான்காவது படமான கமல் நடித்த விக்ரம் படத்தில் பெரிய பெரிய ஆயுதங்கள், போதை பொருட்கள், கொலை, ரத்தம் என சண்டை காட்சிகள் நிறைந்ததாக தான் இருந்தது.

இந்த வகையில் தளபதி விஜய்யின் லியோ படமும் லோகேஷ் பட சாயலில் அமைந்துள்ளது. லியோ படத்தின் முதல் லுக் போஸ்டரில் இருந்து இறுதியாக வெளியான நடிகர் அர்ஜுனின் காட்சிகள் வரை அதிரடிக்கு குறைவில்லாமல் ரத்தம் சொட்ட சொட்ட வெளியானது.

இந்நிலையில் லியோ படத்தின் முதல் பாடலான நாம் ரெடி பாடல் வெளியாகி பட்டி தொட்டி எல்லாம் படையை கிளப்பியது. மேலும் சமூக வலைத்தளங்களில் அதிக பார்வையாளர்கள் கொண்ட பாடலாக முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என எல்லா தரப்பினரையும் மகிழ்விக்கும் முன்னணி ஹீரோவான விஜய்யின் படத்தில் இப்படி ஒரு பாடலா என இந்த பாடலுக்கு விமர்சனங்களும் சமூக ஆர்வலர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதற்கு காரணம் அந்த பாடலில் வரும் சில வரிகள் தான். மில்லி உள்ள போனா போதும் கில்லி வெளிய வருவான் மற்றும் புகை விட்டா பவர் கிக்கு என்னும் வரிகளை மாற்றும் படி சென்சார் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த வரிகள் ரசிகர்களுக்கு தவறான கருத்தை சேர்க்கும் விதத்தில் அமைந்து விட கூடாது என்பதற்க்காக தடை விதித்துள்ளது.

 

மேலும் உங்களுக்காக...