அம்மா பக்கோடா.. மறக்க முடியாத நகைச்சுவைக்கு சொந்தக்காரர் பக்கோடா காதர்..!

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் பக்கோடா காதர். இவர் மெட்ராஸ் டு பாண்டிச்சேரி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த போது அப்பா அம்மாவுடன் பேருந்தில் சென்று கொண்டிருப்பார். அந்த பேருந்தில் ஒருவர் பக்கோடா சாப்பிட்டு கொண்டு இருக்க அவர் அம்மா பக்கோடா’ என்று கேட்பார். அவரது அழுகையை அடக்கவே முடியாது. அன்று முதல் காதர் என்ற பெயர் பக்கோடா காதர் என்று மாறியது.

மதுரை அருகே ஒரு கிராமத்தில் பிறந்த பக்கோடா சிறுவயதில் விளையாட்டில் ஆர்வமாக இருந்தார். அவர் படிப்பின் கவனம் செலுத்தாமல் இருந்ததால் பெற்றோர் கவலையாக இருந்தனர். இந்த நிலையில் எட்டாம் வகுப்பு உடன் படிப்பை நிறுத்திவிட்ட பகோடா காதர் உறவுக்காரருடன் சென்னை வந்தார்.

உறவுக்காரருக்கு சில நாட்கள் உதவியாக இருந்த நிலையில் திரையுலக அறிமுகம் கிடைத்தது. அவரது மாமா ஒருவர் பக்கோடா காதரை சின்ன சின்ன காட்சிகளுக்கு நடிக்க அழைத்துச் சென்றார். இந்த நிலையில் தான் டிகேஎஸ் நாடக குழுவில் இணைந்தார். அவர் சிறு வயது கமல்ஹாசனுடன் இணைந்து சில நாடகங்களில் நடித்துள்ளார்.

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி வேண்டாம்… புதுமுகங்களை வைத்து தரமான படங்கள்… சகலகலா வல்லவரான டி.ராஜேந்தர்..!

pakoda kadhar1

இந்த நிலையில் தான் 1961 ஆம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் உருவான பாசமலர் திரைப்படத்தில் ஒரு சின்ன காட்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த அறிமுகம் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்ததை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நகைச்சுவை வேடத்தில் சிறு வயதிலேயே அவர் நடிக்க தொடங்கினார்.

பார்த்தால் பசி தீரும், இருவர் உள்ளம், சர்வர் சுந்தரம், திருவிளையாடல் போன்ற படங்களில் நடித்தார். பக்கோடா காதருக்கு திருப்புமுனையை கொடுத்த படம் மெட்ராஸ் டு பாண்டிச்சேரி என்ற படம் தான். இந்த படத்தில் அவர் மனோரமா மற்றும் ஏ வீரப்பன் தம்பதிக்கு மகனாக நடித்த நிலையில் இந்த படம் சூப்பர்ஹிட் ஆனதால் மிகவும் பிரபலமானார்.

இதன் பிறகு அவர் எம்ஜிஆரின் பெற்றால் தான் பிள்ளையா உள்பட பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்தார். 1960 கள் மற்றும் 70களில் அதிக படங்களில் குறிப்பாக எம்ஜிஆர், சிவாஜி படங்களில் நடித்தார். அதன் பிறகு 80களில் இவருக்கு படங்கள் குறைய ஆரம்பித்தது.

கணேசனுக்கு பெரியார் கொடுத்த சிவாஜி பட்டம்….. எம்ஜிஆர் தான் காரணம்….. எப்படி தெரியுமா….?

pakoda kadhar

1987 ஆம் ஆண்டு ரஜினியுடன் மனிதன் என்ற படத்திலும், 1988 ஆம் ஆண்டு விஜயகாந்த்தின் செந்தூரப்பூவே படத்திலும் நடித்தார். 1991 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் உருவான பவுனு பவுனுதான் படத்தில் நடித்த பக்கோடா காதர், 1992 ஆம் ஆண்டு சோலையம்மாள் என்ற படத்தில் நடித்த. நிலையில் அவருக்கு அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஒரு திரைப்படத்தில் கேஆர் விஜயா மிகவும் சோகமாக இருப்பார், அவரை சிரிக்க வைக்க வேண்டும் என்று நாகேஷ் படாத பாடுபடுவார். ஆனால் முடியாது. அப்போது தனது உதவியாளரான பக்கோடா காதரை ஜூஸ் கொண்டு வா என்று கூறுவார், அவர் ஜூஸ் கொண்டு வரும்போது, ஜூஸ் கொடுப்பவர் எப்படி உடம்பை வைத்திருக்கிறான், ஜூஸ் குடிக்கிற நான் எப்படி இருக்கிறேன் பாருங்கள் என்று தனது ஒல்லியான உடம்பையும், பக்கோடாவின் குண்டான உடம்பையும் ஒப்பிட்டு பேசுவார்.

packodaa kadher madras to pondic

அப்போது கேஆர் விஜயா கலகலவென சிரித்துவிடுவார். இதுபோல் பல மறக்க முடியாத நகைச்சுவை காட்சிகளில் பக்கோடா காதர் நடித்துள்ளார். நடிகர் பக்கோடா காதர், மதுரையை சேர்ந்த மும்தாஜ் என்பவரை 1976ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணத்தை நடிகர் ஜெய்சங்கர் தான் நடத்தி வைத்தார். சிவாஜி உள்பட பலர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து கூறினர். வெளிநாட்டில் அப்போது இருந்த எம்ஜிஆர், பக்கோடா காதருக்கு வாழ்த்து தந்தி அனுப்பினார்.

3 மனைவி, 7 குழந்தைகள்… சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோக்கள் வியக்கும் ஹீரோவாக வாழ்ந்த டி. எஸ் பாலையா குறித்த பல தகவல்கள்!

திருமணத்திற்கு பின்னர் மும்தாஜ், கணவர் பக்கோடா காதருடன் சில படங்களிலும், சில நாடகங்களிலும் நடித்தார். பின்னர் இருவரும் இணைந்து ஒரு நாடகை குழுவை ஆரம்பித்து சில நாடகங்களை வெற்றிகரமாக நடத்தினர். இந்த நிலையில் 1998 ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி இதய நோய் காரணமாக அவர் காலமானார். பகோடா காதர் மறைந்தாலும் அவரது நகைச்சுவை இன்றும் பேசப்படும் வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.