வாரிசு vs துணிவு; திரையரங்கில் அஜித் ரசிகர் அதிர்ச்சி மரணம்!

Published:

லாரி மீது ஏறி நடனமாடி கீழே குதித்த போது முதுகு தண்டில் காயம் ஏற்பட்டு அஜித் ரசிகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அஜித் நடித்த துணிவு திரைப்படத்தை ரோகினி திரையரங்கில் பார்க்க வந்த ரசிகர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெதுவாக சென்று கொண்டிருந்த ட்ரெய்லர் லாரி மீது நடனம் ஆடியபடி கீழே குதித்த போது முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்த பரத்குமார் வயது 19 என்பது தெரியவந்துள்ளது.  இந்த விபத்துக் குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் உங்களுக்காக...