தெலுங்கிலும் ஹிட்டடித்த குஷி வந்து இவ்வளவு வருசம் ஆச்சா

By Staff

Published:

தமிழில் ஏ.எம் ரத்னம் தயாரிக்க எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில், விஜய், ஜோதிகா, மும்தாஜ் மற்றும் பலர் நடித்த குஷி திரைப்படம் தமிழில் வந்து 20 வருடங்கள் ஆகிறது. கடந்த 2000ம் ஆண்டு வந்த இந்த திரைப்படம் வித்தியாசமான கதையம்சத்துடன் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் பெரிய ஹிட் ஆகியது.

4366bb410e92a77dd12d471418e3ca59

இந்த திரைப்படத்தின் வெற்றியால் இதே இயக்குனர் தயாரிப்பாளர் டீமோடு தெலுங்கில் இப்படம் தயாரிக்கப்பட்டு அடுத்த வருடமே{2001}ல் இப்படம் வெளிவந்தது.

தமிழை போலவே தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது இப்படம். தமிழில் விஜய் செய்த வேடத்தில் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்தார். அந்த நேரத்தில் அடுக்கடுக்கான வெற்றிகளை பவன்கல்யாண் குவித்த நேரமது.

ஜோதிகா வேடத்தில் பூமிகா நடித்தார். இப்படம் வந்து நேற்றுடன் 19 வருடங்கள் ஆவதை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Comment