கிரேஸி நடிகையின் கிறங்க வைக்கும் சொத்து மதிப்பு.. டாப் கியரில் இருக்கும் ஜெனிலியா

Published:

தமிழில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பிய பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை ஜெனிலியா டிசூசா. தமிழில் அறிமுகமானாலும் இந்தி மற்றும் தெலுங்குத் திரையுலகம் அவரை வாரிக் கொண்டது. பாய்ஸ் படத்திற்குப் பின் விஜய்க்கு ஜோடியாக சச்சின் படத்தில் நடித்தார். இப்படம் 175 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் குறும்புப் பெண்ணாக, கிரேஸியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். மேலும் தனுஷுடன் உத்தமபுத்திரன், பரத்துடன் சென்னைக் காதல், மீண்டும் விஜய்க்கு ஜோடியாக வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஜெனிலியா முழுக்க இந்திப் படங்களில் தனது கவனத்தைத் திருப்பினார்.

உன் இரத்தமும், என் இரத்தமும் வெவ்வேறா.. மிரட்டும் கங்குவா டிரைலர்..கடைசியில் வருவது கார்த்தியா?

தற்போது ஒரு படத்திற்கு ரூ. 3 கோடி சம்பளம் பெறுகிறார் ஜெனிலியா. மேலும் ஃபேன்டா, பெர்க் சாக்லேட், பாஸ்ட் டிராக், ஹெச்டிஎப்சி, வாடிகா, பிரில் போன்றவற்றின் விளம்பரத் தூதுவராகவும் இருக்கிறார். விளம்பரங்களில் நடிக்க ரூ. 30 முதல் 50 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார். இதுமட்டுமன்றி தான் சம்பாதித்த பணத்தில் மும்பையின் நடுப்பகுதியில் 12 கோடிக்கு பிரம்மாண்ட பங்களா ஒன்றினை கட்டியிருக்கிறார்.

சோஷியல் மீடியாக்களில் இன்ஸ்டாகிராமில் 14.1 மில்லியன் பாலோயர்களையும், எக்ஸ் தளத்தில் 5.1 மில்லியன் பாலோயர்களையும் வைத்துள்ள ஜெனிலியா ரூ. 8 கோடி மதிப்பில் பென்ஸ், பிம்டபிள்யூ, லேண்ட் ரோவர் ரேஞ்ச் உள்ளிட்ட 4 உயர்ரக கார்களையும் பயன்படுத்துகிறார். இதுமட்டுமன்றி தேஷ் என்ற இசைநிறுவனமும், மும்பை பிலிம் புரடெக்ஷன் ஹவுஸ், இமேஜின் புட்ஸ் போன்ற நிறுவனங்களையும் நடத்தி வருகிறார் ஜெனிலியா. மேலும் 10.2 கோடியில் இதர சொத்துக்களும் வைத்துள்ள ஜெனிலியாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 140 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தனது காதலர் ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்து தற்போது இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிஇருக்கும் ஜெனிலியா மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் உங்களுக்காக...