ஏ.ஆர். ரகுமானின் மருமகனான ஜி.வி. பிரகாஷ் டார்லிங் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதற்கு முன்னதாக குசேலன் படத்தில் ’சினிமா சினிமா’ பாடலில் ஜி.வி. பிரகாஷாகவே வந்து சென்றிருப்பார். விஜயுடன் தலைவா படத்தின் வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலிலும் இணைந்து ஆடி இருப்பார்.
வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்து பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் வளம் வருகிறார்.
ஜி.வி. பிரகாஷ் குமார் கைவசம் இத்தனை படங்களா?:
ஆனால், அதே நேரத்தில் தனக்குள் இருக்கும் ஹீரோ ஆசை காரணமாக படம் ஓடுகிறதோ இல்லையோ தொடர்ந்து நடித்துக் கொண்டும் இருக்கிறார்.
டார்லிங் படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் திரிஷா இல்லனா நயன்தாரா படம் வெளியானது. அதன் பின்னர் பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, புரூஸ் லீ, நாச்சியார், செம, சர்வம் தாளமயம், குப்பத்து ராஜா, வாட்ச்மேன், சிவப்பு மஞ்சள் பச்சை, 100% காதல், வணக்கம் டா மாப்ள, பேச்சிலர், ஜெயில், செல்ஃபி, ஐங்கரன், அடியே, கடந்த வாரம் வெளியான ரெபல் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் கலாய்:
ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான எத்தனை படங்களில் விரல் விட்டு என்னும் அளவுக்கு சில படங்கள் மட்டுமே சுமாராக ஓடி இருக்கிறது. பல படங்கள் தோல்வியை தழுவியுள்ளன. ஆனாலும் தொடர்ந்து ஹீரோவாக ஜி.வி பிரகாஷ் எப்படி நடத்தி வருகிறார் என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என ப்ளூ சட்டை மாறன் ஒரு ட்வீட் போட்டு ஜி.வி பிரகாஷ் குமாரை கலாய்த்து உள்ளார். அதில், ஜி.வி பிரகாஷ் நடித்த அடுத்ததாக, வரும் ஏப்ரல் 4ம் தேதி கள்வன் திரைப்படம் வெளியாகிறது. ஏப்ரல் 11-ஆம் தேதி டியர் திரைப்படம் வெளியாகிறது. அடுத்ததாக கிங்ஸ்டன் திரைப்படம் சம்மர் வெளியீடு என அடுத்தடுத்து வரிசையாக ஜி.வி பிரகாஷ் படங்கள் வெளியாகப் போவதாக அறிவித்துள்ளார். கடந்த வாரம் வெளியான ரெபல் திரைப்படம் ஃபிளாப் ஆன நிலையில், இத்தனை படங்கள் வருகிறதா என நெட்டிசன்கள் கிண்டல் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது. pic.twitter.com/YXAMavkKkk
— Blue Sattai Maran (@tamiltalkies) March 25, 2024