பல இயக்குனர்கள் இயக்கும் படங்களை மோசமாக விமர்சித்து வந்த ப்ளூ சட்டை மாறன் முதல் முறையாக ஆன்டி இண்டியன் எனும் படத்தை இயக்கி இருந்தார். ஆனாலும் அந்த படத்தை ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று பார்த்து ஆதரவு தரவில்லை. படம் வெளியாவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்பட்டன. ஆதம் பாவா எனும் தயாரிப்பாளர் இந்தப் படத்தை தயாரித்து இருந்தார்.
ஆரம்பத்தில் தணிக்கை குழுவினரே இந்தப் படத்திற்கு சான்றிதழ் தர முடியாது என்றும் தடை விதித்தும் உத்தரவிட்டனர். ஆனால் அதன் பின்னர் சட்டப்போராட்டம் நடத்தி ஒரு வழியாக தனது படத்தை ப்ளூ சட்டை மாடல் ரிலீஸ் செய்தார்.
ஆன்டி இண்டியன் ஓடிடி ரிலீஸ்:
அரசியல் நையாண்டி திரைப்படமாக இந்த படம் உருவாகியிருந்தது. ஒரு பிணத்தை புதைக்க முடியாமல் அதனை சுற்றி நடக்கும் இந்து, கிறிஸ்துவும் மற்றும் இஸ்லாமிய அரசியலை போல்டாக பேசியிருந்தார்.
ஆனால் குறைவான பட்ஜெட்டில் பெரிதும் அறிமுகம் இல்லாத நடிகர்களை வைத்து, குறும்படம் போன்ற மேக்கிங்கில் அவர் உருவாக்கிய அந்த படத்தை தியேட்டருக்கு சென்று ரசிகர்கள் யாரும் பார்க்கவில்லை. சில நாட்களில் அந்த படம் தூக்கப்பட்டது. அதன் பின்னர் ஓடிடியில் வெளியாகும் பார்க்கலாம் என்று நினைத்த ரசிகர்களுக்கும் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அந்த படம் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது ஒருவழியாக ஜியோ சினிமா நிறுவனம் ஓடிடியில் முன்னணி நிறுவனமாக மாற வேண்டும் என பல படங்களை காசு கொடுத்து வாங்கி வருகிறது.
கார்ப்பரேட் வில்லன்கள் என தனது விமர்சனத்தில் தொடர்ந்து கார்ப்பரேட் அரசியலுக்கு எதிரான விமர்சனங்களை கொடுத்து வரும் ப்ளூ சட்டை மாறன், தற்போது வேறு வழியில்லாமல் ஜியோ சினிமாவுக்கு தனது படத்தை விற்றிருக்கிறார்.
அதன் அறிவிப்பை அடுத்த லிங்க் உடன் சேர்த்து தற்போது ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ளார். இதெல்லாம் ஒரு படமா என நெட்டிசன்கள் பலரும் இப்பவே கழுவி ஊற்ற ஆரம்பித்துள்ளனர். அந்த படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், தயாரிப்பாளரும் பணம் போட்டு உங்களை வைத்து படம் எடுக்கவில்லையா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.