பிக் பாஸ் 8: இனிமே இத பண்ணாதீங்க.. பாசத்தில் ஆண்கள் அணிக்காக சாச்சனா செஞ்ச விஷயம்.. பிக் பாஸ் கொடுத்த வார்னிங்..

By Ajith V

Published:

Bigg boss Warning to Sachana : தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்பு போல் இல்லாமல் தற்போது ஆண்கள் வெர்சஸ் பெண்கள் என்றுதான் நிறைய டாஸ்க்குகள் தொடங்கி பல விஷயங்கள் இயங்கி வருகிறது. மிக கட்டுப்பாடான விதிகளையும் பிக் பாஸ் இதற்காக வரையறுத்துள்ள நிலையில் அதற்கேற்ப தான் அனைத்து போட்டியாளர்களும் செயல்பட வேண்டும். சில நேரங்களில் அவற்றுள் எதையாவது போட்டியாளர்கள் மீறும் போது நிச்சயம் பிக் பாஸ் சார்பில் எச்சரிக்கை கொடுக்கப்படுவதுடன் ஏதாவது தண்டனைகள் கூட வழங்கப்படும்.

பிக் பாஸ் வீடு இரண்டாக பிரிந்துள்ள நிலையில் நடுவே ஒரு கோடும் போடப்பட்டுள்ளது. இதில் அணி மாறி ஒருவர் கால் மிதித்து விட்டால் அவருக்கு ஏதாவது தண்டனைகளும் டாஸ்க் என்ற பெயரில் கொடுக்கப்படும். இது தவிர ஷாப்பிங் டாஸ்க்கும் தனித்தனியாக ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு நடத்தப்படுகிறது. அவர்கள் எத்தனை ரூபாய்க்கு பொருட்களை டாஸ்க் மூலம் வெற்றி பெறுகிறார்களோ அதற்கேற்ப தான் இரு அணிகளும் சமையலை மேற்கொண்டு வருகிறது.

ஆண்கள் Vs பெண்கள்

பெண்கள் அணி உணவை ஆண்கள் அணியில் இருப்பவர்கள் உண்ணக்கூடாது என்றும் விதி உள்ளது. டாஸ்க்குகள் கூட இரு அணிகளுக்கும் தனித்தனியாக தான் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த முறை பல சவாலான சிக்கல்களும் இதன் மூலம் உள்ளது. இதற்கு மத்தியில் ஆண்கள் அணியில் இருந்து ஒருவர் பெண்கள் அணிக்கும் பெண்கள் அணியில் இருந்து ஒருவர் ஆண்கள் அணிக்கும் வாராவாரம் மாறி விளையாடி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த வாரம் பெண்கள் அணியில் இருக்கும் அன்ஸிதா ஆண்கள் அணியிலும், ஆண்கள் அணியில் இருக்கும் ரயான் பெண்கள் அணியிலும் இணைந்து ஆடி வருகின்றனர். என்னதான் போட்டி, டாஸ்க் என வரும்போது ஆண்கள் பெண்களை எதிரிகளாகவும், பெண்கள் ஆண்களை எதிரிகளாக பார்த்தாலும் மற்ற நேரங்களில் அவர்கள் மிக நட்புடன் தான் இருந்து வருகின்றனர்.

sachana food to boys team

ஜெஃப்ரி, சவுந்தர்யா உள்ளிட்டோரை போல பல சிறந்த நட்பும் இரு அணிகளுக்கு மத்தியில் உள்ளது. அப்படி இருக்கையில் சமீபத்தில் ஆண்கள் அணியில் இருக்கும் சிலருக்காக பாசமாக சாச்சனா செய்த விஷயமே பிக் பாஸில் இருந்து எச்சரிக்கையை பெற்றுக் கொடுத்துள்ளது. பெண்கள் அணியில் என்ன சமைக்கிறார்களோ அதை அவர்கள் மட்டும்தான் சாப்பிட வேண்டும்.

சாச்சனாவை எச்சரித்த பிக் பாஸ்

ஆனால் சமீபத்தில் சாச்சனாவோ தான் ஆசையாக சமைத்த உணவை ஆண்கள் அணியில் இருக்கும் ஜெஃப்ரி மற்றும் விஷால் ஆகியோருக்கு கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதை கவனித்த பிக் பாஸ் உடனடியாக சாச்சனாவிடம், “ஏன் பெண்கள் அணியில் இருக்கும் உணவை ஆண்களுக்கு கொடுக்கிறீர்கள்?” என்று கேட்கிறார். இதற்கு பதில் சொல்லும் சாச்சனா சாதம் கொஞ்சம் மீதம் இருந்ததால் அவர்களுக்கு கொடுத்ததாகவும் தனது விளக்கத்தை கூறுகிறார்.
bigg boss warning to sachana

ஆனாலும் அதனை ஏற்றுக் கொள்ளாத பிக் பாஸ், “அப்புறம் எதற்கு இரு அணிகளுக்கும் தனித்தனியாக ஷாப்பிங் வைக்கிறேன்?. இனிமேல் இப்படி செய்யாதீர்கள்” என்றும் எச்சரிக்கிறார். இதனை கேட்டுக் கொண்ட சாச்சனா, இனிமேல் இந்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன் என்றும் விளக்கம் கொடுக்கிறார்.