டாடா படத்தில் ஹீரோவா நடிக்க வேண்டியவரா பிக்பாஸ் பிரதீப்?

Published:

உலக நாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸின் 7வது சீசன் சமீபத்தில் தொடங்கியுள்ளது. இதில் புதுப் போட்டியாளர்களாக பலர் உள்ளனர்.

இதில் கூல் சுரேஷ், ரவீனா, நிவிஷா, இன்ஸ்டா ஃபேம் பூர்ணிமா ரவி, ராப்பர் நிக்சன், விஷ்ணு தேவி, டான்சர் மணி சந்திரா, லவ் டூ டே அக்‌ஷயா, வனிதா விஜயகுமாரின் மகளின் ஜோவிகா, சிங்கர் யுகேந்திரன், ஜீ தமிழில் சத்யா 1ல் ஹீரோவாக நடித்த விஷ்ணு, ’விக்ரம்’ புகழ் மாயா கிருஷ்ணன், விசித்ரா, எழுத்தாளர் பவா செல்லத்துரை மற்றும் நடிகர் பிரதீப் ஆண்டனி பங்கேற்கிறார்கள்.

அதில் ஒருசிலர் பரிட்சயம் ஆனவர்கள், மற்றவர்கள் திரைத்துறையில் இருந்தாலும் மக்களுக்கு அவ்வளவாக தெரியாதவர்கள். அப்படி ஒருவர் தான் இந்த பிரதீப் ஆண்டனி, அருவி, வாழ் இரண்டு படங்களிலுமே ஹீரோவாக நடித்தவர். டாடாவில், கவினின் நண்பனாக வருவார். நிஜத்திலும் இவரும் கவினும் நெருங்கிய நண்பர்களே. கவினும், பிரதீப்பும் லயோலா கல்லூரியில் வெவ்வேறு துறையில் படித்தவர்கள். இருப்பினும் கல்லூரியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் இருவரும் நல்ல நண்பர்களாகியுள்ளானர்.

வெப் சீரிஸ் களுக்கு வசனம் எழுதுவது, அனிமேஷன் படங்களை உருவாக்குவது என பிரதீப் தொடர்ந்து சினிமாவை சுற்றியே இயங்கி வந்துள்ளார். வாழ், அருவி படங்களில் முதன்மையான கதாபாத்திரத்தில், நடித்தார். அடுத்த படத்திற்கான வாய்ப்பினை தேடி வந்த போது, அவருடைய கல்லூரி நண்பர் பாபு இயக்குனராக முயற்சித்து வந்துள்ளார். ராஜ் கமல் பிலிம்ஸில் வேலை பார்த்து வந்தவர் பாபு. அவர் தன்னிடம் இருக்கும் கதையை பிரதீப்பிடம் சொல்லியுள்ளார், நான் இயக்கும் இந்த படத்தில் நீ ஹீரோ என்று சொல்லியுள்ளார்.

dada

ஆனால், பிரதீப் கவின் சரியான பட வாய்ப்பினைத் தேடி வருவதால், தனக்கு வந்த வாய்ப்பினை கவினுக்கு கொடுத்துள்ளார். கவின் தான் இந்தக் கதைக்கு கரெக்ட், அவனை வைத்து படம் இயக்கு என பாபுவிற்கு  ஐடியா  கொடுத்துள்ளார். அப்படி உருவான படமே ‘டாடா’. 2023ல் வெளியான வெற்றிப் படங்கள் வரிசையில் டாடாவுக்கும் இடம் உண்டு. டாடாவில் பிரதீப்பும் ஒரு கேரக்டராக வருவார். அதுவும் ரசிக்கும் படியாக இருக்கும்.

கவின் பிக்பாஸில் பங்கேற்றபோது அவரைப் பார்ப்பதற்காக பிக்பாஸ் வீட்டிற்கு சென்று பிரதீப் சப்போர்ட் செய்தார். தற்போது பிரதீப் ஆண்டனி பிக்பாஸில் இருக்கிறார். பிக்பாஸ் டைட்டிலை பிரதீப் வெல்வாரா? பார்ப்போம்.

மேலும் உங்களுக்காக...