அந்தப் படத்துல பயந்து பயந்து நடிச்ச விஜய்!.. ஆனா டுவிஸ்ட் அங்க தான் இருக்கு!..

By Sathish

Published:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். தற்போது லியோ படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார் பெயரிடப்படாத அந்த படத்திற்கு அந்தப் படத்திற்கு தற்காலிகமாக தளபதி 68 என வைத்துள்ளனர். விஜய் இன்று முன்னணி நடிகராக இருப்பதற்கு காரணம் அவருடைய இளைஞர்கள் ரசிகர் பட்டாளத்தைத் தாண்டி அதிக அளவில் அவருக்கு குடும்ப ரசிகர்களும் இருக்கின்றனர். குறிப்பாக பெண்கள் மத்தியில் இவருக்கென்று அதிக அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர்.

அதற்கு முக்கியமான அடித்தளமாக அமைந்த திரைப்படம் 2000 ஆண்டில் வெளிவந்த “பிரியமானவளே” படம் தான். இதனை கே.செல்வபாரதி இயக்கியிருப்பார். விஜையுடன் சிம்ரன் விவேக் இணைந்து நடித்திருப்பார்கள். இதற்கு கதை பிரபல எழுத்தாளர் பூபதி ராஜா எழுதி இருப்பார். இவர் தெலுங்கு திரை உலகின் முன்னணி எழுத்தாளர். தமிழில் முதன் முதலில் இவரின் கதை வண்ணத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ”பிரியமானவளே”. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

இதனை பற்றி மேலும் அவர் கூறியதாவது, ”தமிழில் எனக்கு இது முதல் திரைப்படம். இப்படம் தெலுங்கு ரீமேக்தான். ஆனால் தமிழுக்கு ஏற்றவாறு கதையை சில மாறுபாடு செய்தேன். விஜய் அந்த காலகட்டத்தில் சாக்லேட் பாயாகவும் கல்லூரியில் படிக்கும் இளைஞனாகவும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்”.

”திடீரென்று இப்படத்திற்காக அவருடைய வழக்கமான பாணியிலிருந்து புதிய கதை களத்தில் பயணிக்க ஆரம்பித்தார். வழக்கமாக அவருடைய படங்களில் திருமணம் முடிந்து அதோடு கிளைமாக்ஸ் காட்சி நிறைவு பெறும்”.

”ஆனால் பிரியமானவளே படத்தில் திருமணத்தில் இருந்து தான் கதையே தொடங்குகிறது. முதலில் திருமணம் முடிந்த கணவன் கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க தயங்கினார். என்னிடம் வந்து ”எப்படி சார் இந்த கதையை மக்கள் ஏற்றுப்பார்களா..?” என்று கேட்டார். ”சார் இந்தப் படம் மட்டும் ரிலீஸ் ஆகட்டும் உங்களுக்கு அதிக அளவில் குடும்ப ரசிகர்களும் முக்கியமாக பெண் ரசிகைகளும் உங்களுக்கு கிடைப்பார்கள் ”என்று சொன்னேன்.

அதன்படியே படம் வெளிவந்து வெற்றி அடைந்து பெண்கள் மத்தியில் நல்ல பெயரை விஜய்க்கு பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு விஜய் பல வெற்றி படங்கள் கொடுத்திருந்தாலும் இன்றளவும் என்னிடம் வந்து பிரியமானவளே படம் பேசாமல் இருக்க மாட்டார் என்று பேட்டியில் கூறியிருந்தார்.

மேலும் உங்களுக்காக...