பிக் பாஸ் வீட்டில் மீண்டும் பிரதீப்..? அவரது நிபந்தனை இது தான்.. ரசிகர்கள் மாஸ் வெயிட்டிங்..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக கருதப்படுவது பிக் பாஸ். ஆறு சீசன்களை கடந்து ஏழாவது சீசனில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த பிக் பாஸ் விறுவிறுப்பாகவும் அதிரடியாகவும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வைல்ட் கார்டு கண்டஸ்டண்டாக ஐந்து பேர் வீட்டிற்குள் சென்றனர்.

அதிலிருந்து வீட்டில் நடக்கும் சம்பவங்கள் இன்னும் விறுவிறுப்பானது. பெல் டாஸ்க் மூலமாக கூல் சுரேஷ் பிரதீப் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலைத் தொடர்ந்து பிரதீப் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை போட்டியாளர்கள் முன்வைத்தனர். அதாவது பிரதீப்பால் பெண்களுக்கு வீட்டில் பாதுகாப்பு இல்லை என்று சில போட்டியாளர்கள் உரிமைக்குரல் எழுப்பினர்.

maxresdefault 4

இது தொடர்பாக கடந்த வார இறுதி எபிசோடில் கமலிடம் புகார் முன்வைக்கப்பட்டு போட்டியாளர்களின் முடிவை கேட்டு பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் இந்த முடிவு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் இது தவறான முடிவு என்று சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட தொடங்கினர்.

f4e320a258

இதற்கு முந்தைய சீசன்களில் போட்டியாளர்களாக இருந்தவர்களும் பிரதீப் வெளியேற்றப்பட்டது தவறு என்று தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டனர். இதனிடையே நவம்பர் 7 அன்று பிறந்தநாள் கொண்டாடிய உலகநாயகன் கமலஹாசன் அவர்களுக்கு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்ட பிரதீப் ஆண்டனி அதனுடன் #TheeraVisaripatheMei என்ற ஹேர் ஸ்டகையும் சேர்த்திருந்தார்.

Capture

இதனை ரசிகர்கள் தொடர்ந்து ட்ரெண்ட் செய்து வந்தனர். அதோடு மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் பிரதீப் போக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அதற்கு சான்று தான் X வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ள #BringBackPradeep.  இந்நிலையில் பிரதீப் தனது X வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தன்னை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக அனுப்ப வேண்டும் என்று நினைத்தால் தனக்கு எதிராக செயல்பட்ட இரண்டு போட்டியாளர்களுக்கு ரெட் கார்ட் கொடுக்கும் வாய்ப்பை தனக்கு தர வேண்டும் என்றும் தன்னை அந்த வார கேப்டனாக அறிவிக்க வேண்டும் என்றும் பிரதீப் குறிப்பிட்டுள்ளார். தற்போது பிரதீப் ஆண்டனியின் இந்த பதிவும் ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.