என் மண்டைய குழப்பிய கேரக்டர் இதுதான்… உள்வாங்கி நடிக்க ரொம்ப டைமாச்சு…! – ஐஸ்வர்யா ராஜேஷ்

Published:

சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் பர்ஹானா.  படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தன் நடிப்பால் முத்திரை பதித்துள்ளார். இவர் நடிக்கும் எல்லா படங்களிலுமே இவரது நடிப்பு பேசும்படியாக இருக்கும்.

காக்கா முட்டை படத்தில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக வந்து அசத்தியிருந்தார். ரம்மி மற்றும் க/பெ. ரணசிங்கம் படங்களில் விஜய் சேதுபதியுடன் டஃப் கொடுத்து நடித்து இருந்தார். பர்ஹானா படத்தில் நடித்தது பற்றியும் தனது முந்தைய அனுபவங்கள் பற்றியும் இவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா…

Farhana
Farhana

பர்ஹானா படத்தைப் பொறுத்தவரைக்கும் இந்தக் கேரக்டருக்கு முஸ்லிம் எப்படி இருப்பாங்க? எப்படி நமாஸ் பண்ணுவாங்க? சின்ன குழந்தையில இருந்து அதை செஞ்சிட்டு வர்றதுக்கும், டக்னு கத்துட்டு வர்றதுக்கும் டிபரன்ஸ் இருக்கு. டெய்லி டெய்லி பண்றோம் இல்லையா. அதனால நமக்கு திடீர்னு கத்துக்கிட்டு வர்றதுல வித்தியாசம் வரும். அதனால அதைப் பத்தி ரொம்ப லேர்ன் பண்ண வேண்டியிருந்தது.

இப்ப கனா படத்தைப் பொறுத்த வரைக்கும் நான் கிரிக்கெட்டர் கிடையாது. ஆனா 6 மாசம் கத்துக்கிட்டேன். அந்தப் படத்தைப் பார்த்துட்டு யாரும் கம்ளைன்ட் பண்ணல. என்ன பௌலிங் இவ்வளவு மொக்கையா இருக்கு. பேட்டிங் இப்படி இருக்குன்னு சொல்லல. நிஜமாவே ஒரு கிரிக்டெ; பிளேயர பார்க்குற மாதிரி தான் இருக்குன்னு சொன்னாங்கன்னா அதுக்கு அந்த ட்ரெய்னிங் தான் காரணம். இந்தப் படத்துக்கும் அப்படித்தான். டென் டேஸ்னு நினைக்கிறேன்.

அவங்க டெய்லி வருவாங்க. எனக்கு நமாஸ் பண்ண கத்துக் கொடுப்பாங்க. அவங்க மதத்தைப் பத்தியும் நிறைய சொல்வாங்க. அப்புறம் அவங்க என்னென்ன பண்ணுவாங்க. ஜெனரலா அவங்க நெய்ல் பாலீஷ் கூட போட மாட்டாங்க. ஐ பிரோஸ் பண்ண மாட்டாங்க. அப்புறம் நமாஸ் பண்றதுக்கு முன்னாடி கை கழுவுறது, பேஸ் வாஷ் பண்றது எல்லாத்துக்குமே ஒரு பிராப்பரா கத்துக்கணும்.

நான் வந்து செட்டுக்கு பிளாங்கா தான் போவேன். பர்ஹானா கேரக்டருக்கு நான் உள் வாங்குறதுக்கே நிறைய டைம் ஆச்சு. நான் இவ்ளோ பேசுறேன். ஆனா அவங்க அவ்ளலாம் பேச மாட்டாங்க. ரொம்ப சைலன்ட்டா தான் இருப்பாங்க. தலையை நிமிர்ந்து ஹஸ்பண்ட கூட எப்பயாவது ஒரு வாட்டி தான் பார்ப்பாங்க. ரொம்ப ரிசர்வ்டு. ஆனா போல்டானவங்க தான். அவங்க கேரக்டர் அப்படி. ரொம்ப சாப்ட் கேரக்டர்.

டைரக்டர் ஒவ்வொரு இன்புட்டா அந்தக் கேரக்டரைப் பத்தி கொடுத்து கொடுத்து எனக்கு அந்த கேரக்டர் செட்டாக நாலைஞ்சு நாளாச்சு. புரியவே இல்ல. மண்டைல்லாம் கொழம்பிருச்சு. என்ன நடக்குது? நான் இத்தனை படங்கள் நடிச்சிருக்கேன். ஏன் என்னால இதைப் பண்ணவே முடியல?னு ஒரு கட்டத்துல வந்துட்டேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ரியலைஸ் பண்ணி அந்தக் கேரக்டரை உள்வாங்கி நடிச்சேன்.

Ayswarya Rajesh 2 1
Ayswarya Rajesh 2

கனா படத்துல அப்பா மகள் கேரக்டர்ல சத்யராஜ் சாரும், நானும் நடிச்சிருந்தோம். அவர் வந்து ஒரு லெஜண்ட். என்சைக்ளோபீடியா. அவரு சினிமாவுல வந்து பயங்கரமான எக்ஸ்பீரியன்;ஸ். அவருக்கிட்ட வந்து நிறைய விஷயங்கள் ஷேர் பண்ணிருக்கேன். எனக்கு சின்ன வயசுல அப்பா வந்து இல்ல. நிறைய எமோஷனலான அப்பா மகள் கேரக்டர் இருக்குன்னு சொன்ன போது நிறைய விஷயங்கள் பேசிருக்காங்க.

நான் அதான் எங்க அப்பாவை இமேஜின் பண்ணி சத்யராஜ் சார எங்க அப்பாவா பார்த்து…நினைச்சிருக்கேன். சினிமாவுல எப்படின்னா வி ஆர் திங்ஸ் இட் இஸ் ரியல். உண்மையா நாம நினைக்கணும். அவரு எங்க அப்பா. இது எங்க அம்மான்னு நினைச்சா தான் அந்த ரியல் பீலிங் வரும். எல்லா கேரக்டர்ஸ_மே வந்து அப்படித்தான் நினைச்சு நடிச்சிருக்கேன். அப்படித்தான் நான் நினைக்கிறேன்.

மேலும் உங்களுக்காக...