அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகராவார். 2013 ஆம் ஆண்டு பில்லா 2 சூது கவ்வும் ஆகிய திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அசோக் செல்வன்.
2014 ஆம் ஆண்டு தெகிடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் அசோக் செல்வன். தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, கூட்டத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களில் நடித்த அசோக் செல்வன் 2020 ஆம் ஆண்டு ஓ மை கடவுளே திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
தற்போது பல படங்களில் கமிட்டாகி பிசியான நடிகராக இருந்து வருகிறார் அசோக் செல்வன். இந்நிலையில் சசிகுமார் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை பார்த்த அசோக் செல்வன் அந்த படத்தை பற்றிய விமர்சனங்களை கூறி இருக்கிறார்.
அசோக்செல்வன் கூறியது என்னவென்றால் டூரிஸ்ட் ஃபேமிலி படம் மிகவும் அருமையாக இருந்தது. ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த ஒரு ஃபீல் வருகிறது. இயக்குனர் புதுமுகமாக இருந்தாலும் கூட காட்சிகளை அருமையாக அமைத்து இருக்கிறார் என்று பாராட்டி இருக்கிறார் அசோக் செல்வன்.