விஜய் படத்திற்கு நோ சொல்லி, ரஜினி படத்திற்கு ஓகே சொன்ன உலக அழகி!

Published:

இந்திய திரையுலகின் முன்னணி பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராய் 1994 இல் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என பல மொழிப் படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் தமிழில் மணிரத்னத்தின் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து இவர் தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து கலக்கியுள்ளார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துள்ள ஐஸ்வர்யா ராய் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் மட்டுமே நடித்து வருகிறார்.

திரையுலகின் கனவு கன்னியாகவும், பேரழகியாகவும் வலம் வரும் ஐஸ்வர்யா ராய், நடிகர் விஜய்யுடன் ஒரு படத்தில் நடிக்க மறுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் விஜய்யின் தமிழன் படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஐஸ்வர்யா ராய் அந்த நேரத்தில் ஹிந்தியில் கொடிகட்டி பறந்த காலம். பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல ஹிட் படங்களில் பிசியாக நடித்து வந்துள்ளார். அதனால் விஜய்யுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை மறுத்துள்ளார்.

காதலர் தினம் படத்தின் ஹீரோயினுக்கு இப்படி ஒரு நிலைமையா? வாழ்க்கையின் மறுபக்கம்!

அந்த நேரத்தில் விஜய் வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்ததால் ஐஸ்வர்யா ராய் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள வில்லை எனவும் காரணங்கள் கூறப்படுகிறது. அந்த கோபத்தில் தான் இயக்குனர் மஜித், 2000 மிஸ் வேர்ல்ட் போட்டியில் வெற்றி பெற்ற பிரியங்கா சோப்ரா இந்த படத்தில் ஹீரோயினாக களமிறங்கினார். இந்த படம் விஜய்க்கு நல்ல ஹிட் கொடுத்தது.

இந்நிலையில் தளபதி விஜய் தற்பொழுது கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் கொண்ட முன்னணி ஹீரோவாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து பெரிய அளவில் தமிழ் படங்களில் நடிக்காத ஐஸ்வர்யா ராய் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து எந்திரன் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

மேலும் உங்களுக்காக...