திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் தலைவரும், தென்னகத்தின் பெர்னாட்ஷா என்று போற்றப்பட்ட பெருமைக்குரியவர்தான் அறிஞர் அண்ணா. இயல்பாகவே அண்ணா என்று சொல்வதற்குப் பதிலாக அறிஞர் என்ற சொல்லானது தானாகவே வந்து ஒட்டிக் கொள்ளும் அளவிற்கு தனது சீரிய கருத்துக்களை நாடக மேடைகளிலும், அரசியல் மேடைகளிலும் ஒலித்து திராவிடக் கொள்கைகளை மக்கள் மனதில் விதைத்தவர்.
அறிஞர் அண்ணா தனது அரசியல்வாதியாக மட்டுமன்றி சிறந்த எழுத்தாளருமாகத் திகழ்ந்திருக்கிறார். இவர் எழுத்தில் வந்த படங்கள் அனைத்தும் மக்களை சிந்திக்க வைத்தது. 1949-ல் வேலைக்காரி என்ற படத்தின் மூலம் சினிமா உலகிலும் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து ஓர் இரவு, நல்லதம்பி, சகோதரர்கள், ரங்கோன் ராதா, நல்லவன் வாழ்வான் உள்ளிட்ட படங்களுக்கும் கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.
அந்தக் காலத்திலேயே ஒர் இரவு படத்தின் கதையானது ஒரு நாள் இரவில் நடக்கும் நிகழ்வினை படமாக்கியிருப்பார்கள். இவ்வாறு திரைப்படங்களில் பன்முகத் திறமை கொண்ட அறிஞர் அண்ணா கவிஞராகவும் தனது திறமையைக் காட்டியுள்ளார். அவர் எழுதிய வரிகளில் ஒரே ஒரு பாடல் வெளிவந்துள்ளது. அந்தப் பாடல்தான் 1970-ல் ஜெய்சங்கர்-காஞ்சனா நடிப்பில் வெளியான காதல் ஜோதி என்ற படத்தில் அறிஞர் அண்ணா எழுதிய உன் மேல கொண்ட ஆசை என்ற பாடல்.
இருப்பினும் அறிஞர் அண்ணா இறந்த பிறகு இந்தப் பாடல் ரெக்கார்டிங் செய்யப்பட்டுள்ளது. பாரதியாரின் பாடல்கள் அவர் இறந்த பின்பு கூட பல படங்களில் பயன்படுத்தப்படுவது போன்று அறிஞர் அண்ணா எழுதிய இந்தப் பாடல் காதல் ஜோதி படத்தில் வெளிவந்தது.
வெறும் ஒன்..டூ..த்ரீயால் இப்படி ஒரு ஹிட் பாட்டா? சின்ன உதட்டசைவால் மெகாஹிட் ஆன பாடல்..
திருமலை மகாலிங்கம் என்ற இயக்குநரின் படைப்பில் உருவான காதல் ஜோதியில் ‘’உன் மேல கொண்ட ஆசை’’ என்ற இந்த பாடலை அண்ணா எழுதியிருந்தாலும், பாடல் பதிவின்போது, சில இடங்களில் வார்த்தைகள் மாறற் வேண்டும் என்று இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி கவிஞர் சுப்பு ஆறுமுகத்திடம், இந்த பாடலுக்கான சில வார்த்தைகளை மாற்றி எழுதி வாங்கி பின் திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளார்.
அண்ணாவினைப் போலவே கலைஞர் கருணாநிதியும் திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். மேலும் எம்.ஜி.ஆர்., சிவாஜியின் திரை வளர்ச்சிக்கு கருணாநிதியின் வசனமும் ஓர் அங்கமாக விளங்கியது.