சூப்பர் ஸ்டார் நடித்த ஷங்கரின் 2.0 படத்தில் இடம் பற்ற புல்லினங்கால் பாடலை கேட்டுருக்கீறீர்களா? இல்லையென்றால் இந்தப்பாடலை மறுபடியும் ஆழ்ந்து கேளுங்கள். மனிதன் அல்லாத பிற உயிரினங்களின் முக்கியமாக பறவையினங்களின் வாழ்வியலை இரசனையுடன் தமிழ் வளம் கொட்ட பாடியிருப்பவர்தான் பம்பா பாக்யா.
சென்னையைச் சேர்ந்த பம்பா பாக்யா இசைத்துறையில் ஆழ்ந்த ஞானம் பெற்றவர். இவருடைய திறமையை இசை உலகமும் தமிழ் சினிமாவும் அறியும் நோக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் இவரை 2.0 படத்தில் புல்லினங்கால் பாடலை பாட வைத்தார். நா.முத்துக்குமாரின் வைர வரிகளில் உருவான இப்பாடலில் பறவைகளின் வாழ்வியலை படம்பிடித்துக் காட்டியிருக்கும். மேலும் பறவைகள் மீதான காதலையும் நமக்கு அதிகப்படுத்தும்.
இதன் பின் சர்கார் படத்தில் தளபதி விஜய்க்காக சிம்டாங்காரன் பாடலை பாடியபோது தனித்துவமான குரலால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆக தமிழ் சினிமாவிற்கு இன்னொரு சிறந்த பாடகர் கிடைத்துவிட்டார் என்று இசைப் பிரியர்கள் கொண்டாடினர். ஆனால் அதன்பின் வந்ததுதான் சோதனை, சொற்ப பாடல்களே பாடிய நிலையில் தன்னுடைய 49வது வயதில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட இவ்வுலகை விட்டு மறைந்தார்.
பிறந்த நாளில் விபரீத முடிவை எடுத்த முன்னணி நடிகை : அதிர்ச்சியில் திரையுலகம்
இன்றும் யாராவது மறைந்துவிட்டால் பிகில் படத்தில் இவர் பாடிய காலமே காலமே பாடல் அனைவரது ஸ்டேட்டஸ்-லும் நிச்சயம் இடம் பிடிக்கும். சினிமாவிற்காக சில பாடல்களே பாடியிருந்தாலும் ஒவ்வொரு பாடலும் முத்து முத்தாக அமைந்தது எனலாம். இவர் கடைசியாக பொன்னியின் செல்வன்-1ல் பொன்னி நதி பாடலுக்கான முன்பாடிய ஓ.. காவிரியால் நீர்மடிக்கு என்ற பாடலை பாடினார். மேலும் ராஜீவ் மேனன் இயக்கிய சர்வம் தாளமயம் படத்திலும் டிங்கு டிங்கு என்ற பாடலையும் பாடியுள்ளார்.
திரையுலகில் பாடுவதற்கு முன் அதிகமான பக்திப் பாடல்களை பாடியுள்ளார் பம்பா பாக்யா. பிரபல தென்னாப்பிரிக்க இசைக்கலைஞர் பம்பா போல் பாடுமாறு ஏ.ஆர்.ரஹ்மான் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதேபோல் பாடி பின்னர் பாக்யராஜ் என்ற பெயர் பம்பா பாக்யா என்று நிலைத்தது. அவரது பிறந்தாளான இன்று இசை ரசிகர்கள் பம்பா பாக்யா பாடிய பாடல்களை சோஷியல் மீடியாக்களின் ஷேர்செய்து வருகின்றனர்.