பத்தாவது இடத்திற்கு சென்ற அஜீத்! முதல் இடத்தை தட்டி பறித்த தளபதி விஜய்! காணாமல் சென்ற கமல்!

Published:

தமிழ் சினிமாவில் காலத்திற்கு ஏற்றார் போல முன்னணி ஹீரோக்களின் பட்டியலும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டு தான் இருக்கிறது. சிவாஜி- எம்ஜிஆரை தொடர்ந்து ரஜினி- கமல் படங்கள் அந்த காலத்து ரசிகர்களால் பெரிதளவு கொண்டாடப்பட்டது. ஒரு விசேஷ நாட்கள் என்றாலே ரஜினி அல்லது கமல் திரைப்படங்களில் ரிலீஸ் பொறுத்துதான் அந்த நாட்களின் சிறப்பான கொண்டாட்டம் அமைந்திருக்கும். படத்தின் ரிலீசின் முன்பே தியேட்டர்களில் முன் விலை உயர்ந்த கட்அவுட்டுகள் வைப்பது தன் தலைவரின் புகைப்படங்களுக்கு பாலபிஷேகம் செய்வது என ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லாமல் இருக்கும். மேலும் அந்த திரைப்படம் பல வாரங்களைக் கடந்து 100 நாள் வெற்றி விழாவாகவும் கொண்டாடப்படும்.

தற்பொழுது உள்ள சினிமாவில் ரஜினி கமலை தொடர்ந்து விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர் கூட்டம் உள்ளது. தளபதி விஜய் தனது ரசிகர்கள் கூட்டத்தை தனக்காக பயன்படுத்தி படத்தின் ரிலீசிற்கு மட்டும் அல்லாமல் முறையான ஒரு அரசியல் அமைப்பாகவும் மாற்றி வருகிறார். ஆனால் நடிகர் அஜித் தனக்கென எந்த ரசிகர் கூட்டத்தை விரும்பாத ஒரு தனி மனிதனாக சினிமாவில் நிலைத்து நிற்கிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் அதே நாட்களில் தல அஜித் நடித்த துணிவு திரைப்படமும் வெளியாகி நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த மோதல் தளபதி மற்றும் தல ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதை தொடர்ந்து சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. தற்பொழுது தளபதி விஜய் அடுத்ததாக தனது 68வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் அஜித் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகாத நிலையில் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் கோடை விடுமுறை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் தளபதி விஜய்யின் 68வது திரைப்படமும் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படமும் நேருக்கு நேர் மோத வாய்ப்புள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ரஜினி படத்திற்கு நோ சொன்ன ஷாருக்கான்! அதிரடி முடிவெடுத்த லோகேஷ்!

இந்த நேரத்தில் சமூக வலைதளங்களில் ஒன்றான கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 ஹீரோக்களின் லிஸ்ட் சமீபத்தில் வெளியாகி உள்ளது. 2023 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடியும் பட்சத்தில் இந்த ஆண்டு முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்களால் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய ஹீரோக்களின் லிஸ்ட் தற்பொழுது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இந்த லிஸ்டில் பத்தாவது இடத்தில் நடிகர் அஜித் இடம்பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து ஒன்பதாவது இடத்தில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி இடம் பிடித்துள்ளார். எட்டாவது இடத்தில் நடிகர் சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம்சரண் அதிகம் தேடப்பட்டுள்ளார்.

ஏழாவது இடத்தில் நடிப்பு நாயகன் சூர்யா அதிக அளவில் தேடப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து ஆறாவது இடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு இடம்பெற்றுள்ளார். அடுத்ததாக ஐந்தாவது இடத்தில் நடிப்பு அசுரன் தனுஷ் அதிக அளவில் தேடப்பட்டுள்ளார். நான்காவது இடத்தில் பாகுபலி புகழ் பிரபாஸ் இடம் பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் புஷ்பா புகழ் அல்லு அர்ஜுனன் இடம்பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிலைத்துள்ளார். முதல் இடத்தில் தளபதி விஜய் மாஸ் காட்டி வருகிறார். தென்னிந்திய ஹீரோக்களின் முதல் இடத்தில் தளபதி விஜய் இடம்பெற்று இருப்பது தளபதி ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தளபதி விஜய் நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு திரைப்படங்கள் வெளியானது ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...