ரஜினி படத்திற்கு நோ சொன்ன ஷாருக்கான்! அதிரடி முடிவெடுத்த லோகேஷ்!

தமிழ் சினிமாவில் மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியான மாநகரம் திரைப்படத்தின் சுமாரான வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் இரண்டாவதாக வெளியான திரைப்படம் கைதி. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இயக்குனர் லோகேஷ் இருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கிய திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமலஹாசன் உடன் இயக்குனர் லோகேஷ் இணைந்து வெளியான திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படம் உலக அளவில் 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து மிகப் பெரிய வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தது.

அதை தொடர்ந்து சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் இரண்டாவது முறையாக நடித்து வெளியான திரைப்படம் லியோ. இந்த திரைப்படமும் உலக அளவில் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் உறுதியான தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து தலைவர் 171 திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் கதை உருவாக்கத்தில் ஈடுபட்டு இருக்கும் லோகேஷ் தான் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருப்பதாக அதிரடி தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தார். பொதுவாக ஒரு படத்தின் வெற்றிக்கு பின் லோகேஷ் எத்தனை தனிமைப்படுத்திக் கொண்டு அடுத்த படத்திற்கு தயாராகி வருவது இயல்பான விஷயம்தான்.

லியோ படத்திற்கும் இது போன்ற விடுமுறை எடுத்துக்கொண்டு தனது நண்பர்களுடன் மூணார் போன்ற பகுதிகளில் கதை கலந்து உரையாடலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்பொழுது லோகேஷ் தலைவர் 171 படத்தின் முழு கதை உருவாக்கத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தலைவர் ஒன் 71 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக சமீபத்திய தகவல் வெளியாகியிருந்தது. அதைத் தொடர்ந்து இளம் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தலைவர் 1 71 படத்தின் மற்றொரு வருகை குறித்த மாஸ் அப்டேட் ஒன்றை கிடைத்துள்ளது.

ரஜினியின் வேட்டையன் படத்தில் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம் குறித்த மாஸ் அப்டேட்?

அந்த வகையில் தலைவர் 191 படத்தில் ஷாருக்கான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது அதன்படி இயக்குனர் லோகேஷ் மும்பையில் நடிகர் சாருக்கான் நேரில் சந்தித்து தலைவர் 191 படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் படி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் நடிகர் ஷாருக்கான் அதை மறுத்துள்ளார் நான் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிப்பதை தன் ரசிகர்கள் விரும்புவதில்லை என்று கூறி இந்த படத்தில் நடிப்பதை ஷாருக்கான் மருத்து இல்லார். அதைத் தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் இயக்குனர் லோகேஷிடம் தனக்காக ஒரு கதையை தயார் செய்து வரும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஷாருக்கான் தலைவர் ஒன் 71 படத்தில் நடிக்க மறுத்ததை தொடர்ந்து அடுத்ததாக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் அடிப்படையில் தலைவர் 191 படத்தில் கண்டிப்பாக பாலிவுட் நடிகர் ஒருவர் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் ரஜினியின் 160 வது திரைப்படம் ஆன வேட்டையின் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாபச்சன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.