விஜய்யை தொடர்ந்து ஜெயிலர் பாடலை புகழ்ந்து தள்ளிய அஜித்! காரணம் என்ன தெரியுமா…

Published:

சூப்பர் ஸ்டார் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போழுது இறுதிகட்டத்தை நெருங்கிய நிலையில் நேற்று இந்த படத்தில் இருந்து முதல் பாடலான காவாலா பாடல் வெளியானது.

இந்த பாடல் தான் தற்பொழுது சோசியல் மீடியாவில் செம டிரெண்டிங்கில் உள்ளது. மேலும் பாடல் வெளியான சில நிமிடங்களில் இந்த பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து இந்த பாடல் குறித்து பல சினிமா பிரபலங்களும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகினற்னர்.

இந்நிலையில் ரஜினி நடிப்பில் கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு அண்ணாத்த படம் வெளியாகி இருந்தது. சிறுத்தை சிவா பாணியில் குடும்பக்கதையை அடிப்படையாகக் கொண்டு அண்ணன் – தங்கச்சி பாசத்தை கதைக்களமாக கொண்டு அண்ணாத்த படம் வெளியானது.

அதை தொடர்ந்து நெல்சனின் இயக்கத்தில் பீஸ்ட் படம் வெளியானது. படம் பல ட்ரோல்களை சந்தித்தாலும் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக ரஜினியின் பட வாய்ப்பு கிடைத்ததால், ஜெயிலர் படத்தை எப்படியாவது ஹிட்டாகிவிட வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டு வருகிறார் நெல்சன் திலீப் குமார். மேலும் அவரின் முந்தைய படங்களை விட இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஜெயிலர் பாடலை கேட்டு நடிகர் அஜித் சொன்ன வார்த்தை தற்போழுது வைரலாகி வருகிறது. முன்னதாக நடிகர் விஜய் அவர்களும் பாடலை பார்த்து இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜெயிலர் பாடலை கேட்டு நடிகர் அஜித் இசையமைப்பாளர் அனிருத்திற்க்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அஜித் அவர்களின் விடாமுயற்சி படம் அனிருத் இசையில் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 29ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த விழா நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

மேலும் உங்களுக்காக...