விடாமுயற்சியை விஸ்வரூப வெற்றியாக மாற்றுவேன்.. எல்லா வேலையையும் தனியாளா கவனிக்கும் அஜித்!..

By Sarath

Published:

அஜித் நடித்த வலிமை திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறாத நிலையில், துணிவு படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார் நடிகர் அஜித். இந்த ஆண்டு பொங்கலுக்கு விஜயின் வாரிசு படத்துடன் நேருக்கு நேர் மோதியும் பார்த்து விட்டார்.

விஜய் படத்தை விட சற்றே குறைவான வசூல் பெட்டியை துணிவு படம் எடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. வாரிசு படத்தின் வசூல் 300 கோடி என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், துணிவு திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவில்லை. சுமார் 200 முதல் 250 கோடி ரூபாய் வரை துணிவு படம் ஈட்டி இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

விஜய்யுடன் சினிமா போட்டி:

அதிரடியாக லியோ படத்துடனும் மோதுவதற்காக தயாரான நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் சில மாற்றங்களை செய்ய சொல்லி இருக்கிறார். ஆனால், அஜித்துக்கு பிடித்த அளவுக்கு மாற்றங்களை விக்னேஷ் சிவன் செய்யாத நிலையில் அதிரடியாக அவரையே மாற்றிவிட்டார் அஜித்.

விக்னேஷ் சிவனுக்கு பதிலாக ஏகே 62 படத்தின் இயக்குனராக மகிழ் திருமேனியை அறிவித்தனர். மே ஒன்றாம் தேதி விடாமுயற்சி திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது.

ஹாலிவுட் தரத்தில் விடாமுயற்சி:

அந்த அறிவிப்பு வெளியாகி சில மாதங்கள் கடந்த நிலையில், நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை பெரும்பாலும் துபாயில் நடத்த திட்டமிட்டுள்ளார். ஹாலிவுட் பட தரத்தில் விடாமுயற்சி படத்தை உருவாக்க வேண்டும் என்கிற முடிவுடன் பல வேலைகளை நடிகர் அஜித்தே முன்னின்று செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தடம், மீகாமன், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடிகளாக திரிஷா மற்றும் ஹூமா குரேஷி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லியோ வில்லனையும் தூக்கிட்டார்:

மேலும், சமீபத்தில் விஜயின் லியோ படத்தில் வில்லனாக நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துடன் நடிகர் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படம் வலைதளங்களில் வைரல் ஆனது. விடாமுயற்சி படத்திலும் அஜித்துக்கு வில்லனாக சஞ்சய் தத் நடிக்கப் போகிறார் என்கிற தகவலும் சினிமா வட்டாரத்தில் தீயாக பரவி வருகின்றன.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு எதிர்பார்த்ததை விட பல மாதங்கள் காலதாமதமான நிலையில், தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு கூடுதல் செலவை வைக்கக் கூடாது என்கிற நோக்கத்துடன் துபாயில் படப்பிடிப்பு நடக்கும்போதே படத்தின் எடிட்டிங் பணியையும் நடத்திவிட எடிட்டரையும் நடிகர் அஜித் துபாய்க்கு அழைத்து செல்ல உள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

விஸ்வரூப வெற்றி:

விடாமுயற்சியை விஸ்வரூப வெற்றியாக மாற்ற நடிகர் அஜித் ஏகப்பட்ட ஐடியாக்களை இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என பலருக்கும் தனது அனுபவங்களையும் தனது விருப்பங்களையும் விடாமுயற்சி எப்படி வரவேண்டும் என்பதையும் தெளிவாக ஷேர் செய்து வருகிறார். இந்த அளவுக்கு ஆர்வத்துடன் நடிகர் அஜித் இதற்கு முன்னதாக இருந்ததே இல்லை என்றும் கூறுகின்றனர்.