ரமேஷ் கண்ணா என்றால் உடனே தமிழ் திரை உலகில் உள்ள காமெடி நடிகர் தான் ஞாபகம் வரும். விஜய், அஜித், சூர்யா உட்பட பல பிரபலங்களுடன் இவர் இணைந்து காமெடி கேரக்டரில் நடித்து உள்ளார். பெரும்பாலும் இவர் ஹீரோக்களின் நண்பராக நடித்துள்ளார்.
ஏராளமான படங்களில் காமெடி வேடத்தில் நடித்த இவர் ஒரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் ரமேஷ் கண்ணா, ஒரு திரைப்படத்தையும் ஒரு சீரியலையும் இயக்கியுள்ளார்.
அஜித், விஜய் இருவருமே நடிக்க மறுத்த கதை.. துணிந்து நடித்த பார்த்திபன்.. சிறப்பு தோற்றத்தில் அஜித்..!
கடந்த 1999ஆம் ஆண்டு அஜித், தேவயானி, ஹீரா நடித்த ‘தொடரும்’ என்ற திரைப்படத்தை இயக்கியது இவர் தான். அதுமட்டுமின்றி இவர் சில திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். ‘பெரிய குடும்பம்’, ‘முனி’, ‘நம் நாடு’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ உள்பட சில படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். ‘ஆதவன்’ படத்திற்கு கதை எழுதியுள்ளார். இருப்பினும் இவர் இயக்கிய ஒரே திரைப்படம் ‘தொடரும்’ என்ற படம் தான்.

இந்த படத்தின் கதை என்னவென்றால் அஜித் மற்றும் தேவயானி கணவன் மனைவியாக இருப்பார்கள். கணவன் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வேறு பெண்கள் அவரை பார்த்தால் கூட அவர்களை வெறுப்பார். இந்த நிலையில் தான் அஜித்தை ஒரு கட்டத்தில் ஹீரா கட்டிப்பிடிக்க அதை தேவயானி பார்த்து விட பிரச்சனை பெரிதாகும்.
இந்த நிலையில் தேவயானிக்கு ஒரு கொடிய நோய் இருப்பது தெரியவரும், இன்னும் சில நாட்களில் தான் இறந்து விடுவோம் என்று தேவயானிக்கு தெரிந்ததும், அஜித்தின் நலனுக்காக அவரை ஹீராவுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புவார். ஆனால் அஜித் அதற்கு ஒப்புக் கொள்ளாததால் அஜித் தன்னை வெறுக்கும்படியான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வார்.
அஜித் – சிவாஜி நடிக்க இருந்த படம்.. துரோகம் செய்ய விரும்பாததால் இயக்க மறுத்த இயக்குனர்..!

ஒரு கட்டத்தில் தேவயானி இறந்த பிறகு, அவருடைய விருப்பத்தின்படி அஜித் ஹீராவை திருமணம் செய்து கொள்வார். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு தேவயானி பெயரையே வைப்பார்கள்.
இந்த வித்தியாசமான கதையை தான் திரைக்கதை, வசனம் எழுதி ரமேஷ் கண்ணா இயக்கி இருந்தார். இளையராஜாவின் இசையில் உருவான இந்த படத்தில் ஆறு பாடல்கள் உள்ளன. பின்னணி இசையை இளையராஜா அருமையாக கம்போஸ் செய்திருப்பார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் அதன் பிறகு ரமேஷ் கண்ணா எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
