ஐஸ்வர்யா ராய் ஜோடி இல்லை என்பதால் படத்தில் இருந்து விலகிய பிரசாந்த்.. அஜித்துக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

தான் நடிக்கும் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்கும் நிலையில், தனக்கு ஜோடி இல்லாமல் இன்னொருவருக்கு ஜோடியாக நடிப்பதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று நடிகர் பிரசாந்த் ஒரு படத்தில் இருந்து விலகினார் என்றால் அந்த படம் தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.

ராஜிவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி, அஜித்குமார், தபு, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ் உள்பட பலரது நடிப்பில் உருவான திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.

அஜித் விஜய்க்கு இணையான புகழ்.. 2 படங்களை மிஸ் செய்ததால் படுவீழ்ச்சியடைந்த அப்பாஸ்..!

kandu konden2

கடந்த 2000ஆம் ஆண்டு மே மாதம் இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஏஆர் ரகுமானின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியது.

இந்த படம் உருவானபோது பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது. முதலாவதாக இந்த படத்தில் நடிக்க பிரசாந்த், அப்பாஸ், மீனா மற்றும் சௌந்தர்யா ஆகிய நான்கு பேர் ஒப்பந்தம் ஆகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் ராஜிவ் மேனன் மும்பைக்குச் சென்றபோது தற்செயலாக ஐஸ்வர்யா ராய் அவர்களை சந்தித்து பேசினார்.

அப்போது தனது அடுத்த படம் குறித்து அவரிடம் கூறிய போது இந்த படத்தில் எனக்கு ஒரு கேரக்டர் இருந்தால் கொடுங்கள், நானே நடிக்கிறேன் என்று சொல்ல உடனடியாக அவர் ஒரு கேரக்டரை கொடுத்தார். அந்த கேரக்டர் அப்பாஸ் அல்லது மம்மூட்டிக்கு ஜோடியாக அமையும் வகையில் கதை இருந்தது.

அஜித் – சிவாஜி நடிக்க இருந்த படம்.. துரோகம் செய்ய விரும்பாததால் இயக்க மறுத்த இயக்குனர்..!

இந்த நிலையில் தான் பிரசாந்த் ஏற்கனவே ஜீன்ஸ் படத்தில் தான் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்திருந்ததாகவும் எனவே தனக்கு ஜோடியாக நடிக்கும் வகையில் ஐஸ்வர்யா ராய் கேரக்டரை மாற்ற வேண்டும் என்றும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் கூறியதாகவும், ஆனால் ஐஸ்வர்யா ராய் கேரக்டரை மாற்ற முடியாது என்று இயக்குனர் உறுதியாக கூற, அதனால் பிரசாந்த் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

kandu konden1

நடிகர் பிரசாந்த் இந்த படத்தில் இருந்து விலகிய பிறகுதான் இந்த படத்தில் அஜித் இணைந்தார். அஜித் தனக்கு ஜோடி ஐஸ்வர்யா ராய் இல்லை என்றாலும் பரவாயில்லை தன்னுடைய கேரக்டர் நன்றாக இருக்கிறது, மேலும் தபுவுடன் நடிப்பது எனக்கு பெருமை தான் என்று கூறி இந்த படத்தில் இணைந்து கொண்டார். அதன் பிறகு தான் இந்த படம் உருவானது.

இந்த படத்தின் கதையின்படி ஐஸ்வர்யா ராய் முதலில் அப்பாஸை காதலித்து அதன் பின் அப்பாஸ் கைவிட்ட பின் இறுதியில் மம்முட்டியை திருமணம் செய்வது போன்று முடிந்திருக்கும். அதேபோல் ஐஸ்வர்யா ராயின் சகோதரி தபுவை அஜித் காதலிப்பார், அஜித் இந்த படத்தில் இயக்குனர் கேரக்டரில் நடித்திருப்பார்.

மேலும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காரைக்குடி செட்டிநாடு வீட்டில் படமாக்கப்பட்டிருக்கும். இந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு காரைக்குடி எம்ஏஎம் ராமசாமி அவர்களின் நெருங்கிய நண்பர் என்பதால் அவருடைய வீட்டை படப்பிடிப்புக்கு பயன்படுத்த அனுமதி கேட்டதாகவும், அவர் முழு கதையையும் கேட்டுவிட்டு அனுமதி கொடுத்ததாகவும் ஆனால் அதே நேரத்தில் தன்னுடைய வீட்டில் எந்த ஒரு சோகக் காட்சியையும் அதாவது ஒரு கேரக்டர் இறக்கும் காட்சியை படமாக்க கூடாது என்று நிபந்தனை விதித்ததாகவும் கூறப்பட்டது.

அதனால்தான் இந்த திரைப்படத்தில் நிழல்கள் ரவி இறக்கும் காட்சியை மட்டும் வேறு ஒரு வீட்டில் படமாக்கப்பட்டதாகவும், மற்ற அனைத்து காட்சிகளையும் அவருடைய வீட்டிலே எடுத்ததாகவும் இயக்குனர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

kandu konden4

காரைக்குடி அரண்மனையின் பிரமாண்டமான காட்சிகள் இந்த படத்தில் பிரமிப்பை ஏற்படுத்தும். இந்த படத்தின் திரைக்கதை, பாடல்கள் மற்றும் நட்சத்திரங்களின் நடிப்பு சிறப்பாக இருந்ததையடுத்து இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்காக சிறந்த பாடகருக்கான தேசிய விருது கிடைத்தது. அந்த விருதை சங்கர் மகாதேவன் பெற்றார். அந்த பாடல் தான் ‘என்ன சொல்லப் போகிறாய்’ என்ற பாடல். அந்த பாடல் இன்றளவும் பிரபலமாக உள்ளது.

லைலா கேட்ட ஒரே ஒரு கேள்வி.. படத்தில் இருந்து தூக்கிய தயாரிப்பாளர்.. சிம்ரனின் முதல் படத்தில் ஏற்பட்ட பஞ்சாயத்து..!

மொத்தத்தில் மின்சார கனவு என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ராஜிவ் மேனனின் இரண்டாவது படமான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு 19 ஆண்டுகள் கழித்து தான் ராஜிவ் மேனன், ஜிவி பிரகாஷ் நடித்த சர்வம் தாள மயம் என்ற படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...