மைனஸ் 15 டிகிரி குளிரில் படப்பிடிப்பு: ஒத்துழைப்பு கொடுத்த பிரபல நடிகர்!

By Staff

Published:


a64b4f765acfa99b788deed9e3cccbca

விஜய்ஆண்டனி மற்றும் அருண்விஜய் இணைந்து நடிக்கும் ’அக்னி சிறகுகள்’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் முதல் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை ரஷ்யாவில் மைனஸ் 15 டிகிரி குளிரில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர் என்ற தகவலும், இந்த குளிரிலும் அருண்விஜய் உள்பட படக்குழுவினர்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. மேலும் மைனஸ் 15 டிகிரியில் படப்பிடிப்பு நடைபெற்றது குறித்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது

மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி, அருண்விஜய், அக்சராஹாசன், ’அர்ஜுன் ரெட்டி’ நாயகி ஷாலினி பாண்டே, பிரகாஷ்ராஜ், நாசர், பிக்பாஸ் புகழ் மீராமிதுன், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடித்து வருகின்றனர். நடராஜன் சங்கரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு பாட்ஷா ஒளிப்பதிவும், கிருபாகரன் புருஷோத்தமன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.

இந்த படத்தில் அக்சராஹாசன் ‘விஜி’ என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் அக்சராஹாசனின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Comment