பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகராவார். ஆரம்பத்தில் பல குறும்படங்களை தயாரித்து தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் பிரதீப் ரங்கநாதன். அது மட்டுமில்லாமல் படத்தொகுப்பு இயக்கம் போன்ற பல பணிகளையும் செய்து வந்தார்.
2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கினார் பிரதீப் ரங்கநாதன். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு லவ் டுடே திரைப்படத்தை இயக்கி அதன் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். இந்த திரைப்படம் இளைஞர்களிடையே மிக பிரபலமாகி வெற்றி பெற்றது.
லவ் டுடே பட வெற்றிக்கு பிறகு நாயகனாக பல படங்களில் நடிப்பதற்காக கமிட் ஆகி நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார் பிரதீப் ரங்கநாதன். அந்த வகையில் இன்று இவர் நடித்த Dragon திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அடுத்ததாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படம் வெளிவர தயாராக இருக்கிறது.
Dragon திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஓரளவு நல்ல விமர்சனங்களை கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் மக்களின் வரவேற்பை பார்த்த பிரதீப் ரங்கநாதன் உருக்கமாக பத்திரிகையாளர்களிடம் பேசி இருக்கிறார். அவர் கூடவே இந்த திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரி முத்துவும் ஒரு செய்தியை பகிர்ந்திருக்கிறார்.
முதலில் பிரதீப் ரங்கநாதன் உருக்கமாக இந்த படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் கண்கலங்கி விட்டேன். இந்த படத்தை இவ்வளவு அருமையாக உருவாக்கிய அஸ்வத் மாரிமுத்துவுக்கு நன்றி என்று கூறி பேசியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ்-ம் நானும் பிரதீப்பும் இணைந்து மீண்டும் ஒரு படம் கண்டிப்பாக பண்ணுவோம் என்ற செய்தியையும் பத்திரிகையாளர்கள் முன் கூறி இருக்கிறார். இவர்களது காம்போவை மீண்டும் எதிர்பார்க்கிறோம் என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.