விஜயகாந்த் ஜோடியாக மட்டும் 6 படங்கள்.. நடிகை விஜி வாழ்க்கையில் விளையாடிய விதி..!

Published:

விஜயகாந்த் நடித்த பல திரைப்படங்களில் நாயகியாக நடித்த நடிகை விஜியின் காதல் தோல்வி காரணமாக தனது வாழ்க்கையை தற்கொலை செய்து முடித்துக் கொண்டது பெரும் சோகத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது.

கங்கை அமரன் இயக்கத்தில் உருவான ’கோழி கூவுது’ என்ற திரைப்படத்தில் பிரபு ஜோடியாக நடிகை விஜி அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை அடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது.

viji3

குறிப்பாக விஜயகாந்த் ஜோடியாக நடிகை விஜி ’சாட்சி’ என்ற திரைப்படத்தில் தான் முதல்முறையாக நடித்தார். சங்கிலி முருகன் தயாரிப்பில் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இதே கூட்டணி மீண்டும் இணைந்த ’வெற்றி’ என்ற திரைப்படத்திலும் விஜய்காந்த் ஜோடியாக விஜி நடித்தார். அதன் பின்னர் ’நல்ல நாள்’, ’புதுயுகம்’, ’ஈட்டி’ உள்ளிட்ட படங்களிலும் விஜயகாந்த் ஜோடியாக விஜி நடித்தார்.

இந்த நிலையில் ’பூவே உனக்காக’ என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கும்போது அவருக்கு திடீரென காயம் ஏற்பட்டது. அந்த காயத்திற்காக அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவருக்கு தவறான சிகிச்சை அளிப்பிட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த மருத்துவமனை மீது அவர் வழக்கு தொடர்ந்த நிலையில் மருத்துவமனை அவருக்கு சிகிச்சைக்கான பணத்தை திருப்பி கொடுத்ததாக கூறப்பட்டது.

viji2

அதன் பின்னர் அவர் வேறொரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து குணமான நிலையில் தான் விஜயகாந்த் தனது படங்களில் நடிக்க விஜிக்கு வாய்ப்பு கொடுத்தார். அதுதான் விஜயகாந்த் நடித்த சிம்மாசனம் திரைப்படம். ஆனால் அதுவே அவரது கடைசி படமாக இருந்தது தான் பெரும் சோகம்.

இந்த நிலையில் இயக்குனர் ஏஆர் ரமேஷ் என்பவரை விஜி காதலித்தார். ஏ.ஆர்.ரமேஷ் திருமணமானவர் என்று தெரிந்திருந்தும் அவரை காதலித்த நிலையில் திடீரென ஏஆர் ரமேஷ் அவரை கைவிட்டு விட்டதாகவும் அதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

viji1

விஜியின் தற்கொலை வழக்கை விசாரணை செய்த போலீசார் ஏஆர் ரமேஷ் மற்றும் அவரது மனைவி சுமதி மற்றும் அவரது நண்பரை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் மூவருக்கும் எதிராகவே தீர்ப்பு வந்ததாகவும் கூறப்பட்டது.

மேலும் உங்களுக்காக...