தமிழ் சினிமாவில் கடந்த 90 கள் மற்றும் 2000 ஆண்டுகளில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை சிம்ரன். இவர் தன்னுடைய வாழ்க்கையில் மூன்று காதல் தோல்விகளை சந்தித்து அதன் பிறகு தனது பள்ளி கால தோழரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆனார். அதுமட்டுமின்றி ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அந்த படத்தை அவர் மிஸ் செய்து அதன் பிறகு வருத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தூர்தர்ஷன் சேனலில் திரைவிமர்சனங்களை தொகுத்து வழங்கும் ஒரு தொகுப்பாளியாக சிம்ரன் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன் பிறகு அவர் ஒரு சில ஹிந்தி படங்களில் நடித்த நிலையில் ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டார்.
அதன் பிறகு தான் அவர் தமிழில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க கமிட் ஆனார். ஒன்று சிவாஜி கணேசன் மற்றும் விஜய் நடித்த ’ஒன்ஸ்மோர்’ இன்னொன்று அப்பாஸ் நடித்த ’விஐபி’. இந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது.
அதன் பிறகு அவர் விஜய், அஜித், சூர்யா, என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். கன்னத்தில் முத்தமிட்டால் உள்பட ஒருசில நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் நடித்தார். 2000 ஆண்டுகளில் அதிக வருடங்கள் நாயகி ஆக நடித்தவர் சிம்ரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவரது காதல் வாழ்க்கை தான் கசப்பானது. ஆரம்பத்தில் அப்பாஸ் உடன் ஒரு சில திரைப்படங்களில் நடித்த நிலையில் இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டது. பத்திரிகைகளிலும் இது குறித்த கிசு கிசுக்கள் வாழ்ந்த நிலையில் அப்பாஸ் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் உச்சத்தில் இருந்ததால் அதை கெடுத்துக்கொள்ள விரும்பாமல் சிம்ரன் உடனான தொடர்பை முறித்து கொண்டதாக கூறப்பட்டது.
இதனை அடுத்து தான் டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரத்துடன் சிம்ரன் நெருக்கமானார்,. இருவரும் குடும்பம் நடத்தியதாக கூட அன்றைய நாட்களில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் ராஜு சுந்தரத்தின் குடும்பத்தினர் இந்த காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனால் அவர் சிம்ரனை விட்டு பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனை அடுத்து கமல்ஹாசன் உடன் சிம்ரன் நெருக்கமானார். அவருடன் பஞ்சதந்திரம் உள்பட ஒரு சில படங்களில் நடித்த போது இருவரும் காதலித்ததாகவும் திருமணம் செய்ய போவதாகவும் கூட கிசுகிசு கெளம்பியது. அதுமட்டும் இன்றி சிம்ரன் தனது சம்பளத்தை கூட கமல்ஹாசனின் தான் கொடுத்து வைத்திருந்தார் என்றும் கணவன் மனைவி போல் வாழ்ந்தார்கள் என்று கூட கூறப்பட்டது.
ஆனால் கமல்ஹாசன் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் என்னுடைய பெட்ரூமில் ஏன் எட்டிப் பார்க்கிறீர்கள் என்று காரசாரமாக கூறியதும், அதன்பின் சிம்ரன் அவரிடம் இருந்தும் விலக வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி என்ற திரைப்படத்தில் சிம்ரன் தான் சந்திரமுகி கேரக்டரில் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் ரஜினிக்கு ஜோடியாக தான் நடிப்பேன் என்று பிரபுக்கு ஜோடியாக நடிக்க முடியாது என்று கூறி அந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது.
மேலும் அந்த படத்தில் கமிட்டான போது அவர் திருமணம் ஆன புதிதாக இருந்தார் என்றும் அப்போது அவர் கர்ப்பமாக இருந்தார் என்றும் கூறப்பட்டது. அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஆவேசமாக நடனம் ஆட வேண்டும் என்பதால் அது கர்ப்பத்திற்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறியதால் அந்த படத்தில் இருந்து அவர் விலகியதாகவும் கூறப்பட்டது. அதன் பின் நீண்ட இடைவெளிக்கு ‘பேட்ட’ படத்தில் ரஜினியுடன் நடித்து தன்னுடைய ஆசையை பூர்த்தி செய்து கொண்டார்.
3 காதல் தோல்விக்கு பிறகு நடிகை சிம்ரன் கலந்த 2002 ஆம் ஆண்டு தன்னுடைய பள்ளி காலத்து தோழர் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கூட சிம்ரன் தமிழ் சினிமாவில் பிஸியாக தான் இருக்கிறார் என்பதும் விக்ரமின் துருவ நட்சத்திரம், பிரசாந்தின் அந்தகன் உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.