ஒரே நடிகை.. ஒரே படம்.. ஆனால் 5 மொழிகள்.. ஒவ்வொரு படத்துக்கும் எகிறிய சம்பளம்..

Published:

தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நெடுந்தொடர் மூலம் தனம் என்ற கதாபாத்திரத்தில் ஒவ்வொரு இல்லங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை சுஜிதா. நமக்கும் இப்படி ஓர் அண்ணி கிடைக்கமாட்டாரா என அனைவரையும் ஏங்க வைத்தவர். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்தவர். மேலும் 10-க்கும் மேற்பட்ட மெகா சீரியல்களிலும் நடித்துப் புகழ்பெற்றவர் சுஜிதா.

1987-ல் மலையாள மொழியில் இயக்குநர் பாசில் இயக்கிய, மம்முட்டி நடிப்பில் வெளியான பூவினு புதிய பூந்தென்னல் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் சுஜிதா. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் இப்படம் பூவிழி வாசலிலே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதுவும் 100 நாட்களைக் கடந்து வெற்றி பெற்றது. இப்படி மொழிக்கு மொழி மாற்றியைமைக்கப்பட்ட பூவிழி வாசலிலே திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றது.

இதில் ஓர் ஒற்றுமை என்னவென்றால் இதில் குழந்தையாக நடித்த சுஜிதாவே அனைத்து மொழிகளிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதல் படத்தில் சம்பளமாக ரூ. 5,000 பெற்றிருக்கிறார். ஆனால் அந்தப் படத்தில் ஏஜெண்ட் கமிஷன் ரூ. 2000 போக மீதம் ரூ.3,000 சம்பளம் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து தமிழில் இப்படம் தயாரான போது கதைக்கு ஏற்ற ஆண்குழந்தை கதபாத்திரம் அமையாததால் மீண்டும் சுஜிதாவே நடித்திருக்கிறார். அதற்குச் சம்பளமாக 20,000 பெற்றிருக்கிறார்.

உன் இரத்தமும், என் இரத்தமும் வெவ்வேறா.. மிரட்டும் கங்குவா டிரைலர்..கடைசியில் வருவது கார்த்தியா?

இதனையடுத்து இப்படம் தெலுங்குக்கு மாறியது. தெலுங்கில் சிரஞ்சீவி ஹீரோ. இரண்டு மொழிகளிலும் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த சுஜிதாவே மீண்டும் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க இம்முறை அடித்தது லக். இந்தப் படத்திற்கு அவருக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ. 80,000. இதுவே அவர்களுக்கு பெரிய தொகையாக அப்போது இருந்திருக்கிறது. மேலும் கன்னடத்திலும் நடித்து இதே தொகையை சம்பளமாகப் பெற்றார். இதனையடுத்து மீண்டும் அதிர்ஷ்ம் அவரைப் பின்தொடர்ந்து இந்தியிலும் பூவிழி வாசலிலே போக அங்கு கோவிந்தா ஹீரோ. இந்த முறை சுஜிதாவிற்கு அடித்த பம்பர் தான். அவரது சம்பளம் இரட்டிப்பாகி ரூ. 1,50,000 பெற்றிருக்கிறார்.

இப்படி ஒரே படத்தினை 5 மொழிகளிலும் எடுத்து அப்பவே பான் இந்தியா குழந்தை நட்சத்திரமாக நடித்து படத்திற்குப் படம் தனது சம்பளத்தினை பல மடங்கு உயர்த்திப் பெற்றிருக்கிறார் நடிகை சுஜிதா. அனைத்து மொழிகளிலும் படம் சூப்பர் ஹிட் ஆனது தனி வரலாறு.

மேலும் உங்களுக்காக...