திடீரென ஷுட்டிங்கை நிறுத்திய எம்.ஜி.ஆர்.. அதிர்ந்த படக்குழு அடுத்த அரைமணி நேரத்தில் நடந்த மேஜிக்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையில் அவருக்கு மகுடம் சூட்டிய திரைப்படங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்று தான் பணம் படைத்தவன். 1965-ல் வெளியான இப்படத்தினை டி.ஆர்.ராமன்னா இயக்கியிருந்தார். சௌகார் ஜானகி, கே.ஆர்.விஜயா, நாகேஷ்…

Sowkar

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையில் அவருக்கு மகுடம் சூட்டிய திரைப்படங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்று தான் பணம் படைத்தவன். 1965-ல் வெளியான இப்படத்தினை டி.ஆர்.ராமன்னா இயக்கியிருந்தார். சௌகார் ஜானகி, கே.ஆர்.விஜயா, நாகேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். கண்போன போக்கிலே கால் போகலாமா என்ற சூப்பர் ஹிட் தத்துவப் பாடல் இடம்பெற்ற திரைப்படமும் இதுவே.

எம்.எஸ்.வி.-ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை மற்ற நடிகர்களைப் போல் அல்லாமல் வந்தோமோ.. டயலாக் பேசினோமா.. நடித்தோமா என்று செல்பவர் கிடையாது. தான் நடிக்கும் படங்களில் சிறிது குறை இருந்தால் கூட அதை இயக்குநரிடம் எடுத்துரைத்து உடனே சரி செய்வார்.

மேலும் நாடகங்களிலிருந்து சினிமாவிற்கு வந்தததால் தொழில்நுட்ப ரீதியாகவும் பலவற்றைத் தெரிந்து வைத்திருந்தார். மேலும் சினிமாவில் மதுகுடிக்கும் காட்சிகளில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்தார். எந்தப் படமானாலும் சுபமான முடிவு வேண்டும் என்பதிலும்,பாடல்களிலும் கூட மிகுந்த சிரத்தை எடுத்து தனது சொந்தப் படம் போல் அக்கறை கொண்டு நடிப்பார். அதனால் அவர் நடித்த படங்கள் அனைத்துமே வெள்ளி விழா படங்களாக அமைந்தது. மக்களிடமும் எளிதில் சென்று சேர்ந்தது.

கங்கை அமரனுக்காக வந்த வாய்ப்பு.. அடம்பிடித்த ஏவிஎம் சரவணன்.. புக் ஆன இளையராஜா..

இப்படி சினிமாவில் சகல வித்தைகளையும் தெரிந்து வைத்திருந்த எம்.ஜி.ஆர். பணம் படைத்தவன் பட ஷுட்டிங்கின் போது சௌகார் ஜானகியுடன் நடித்த காட்சி ஒன்றில் அவர் அணிந்திருந்த உடையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அதுவரை ஒன்றும் தெரியாத உடை ஷுட்டிங் ஆரம்பமானதும் விளக்குகள் எரியும் போது சௌகார் ஜானகியின் உடை கண்ணாடி போல் தெரிந்திருக்கிறது.

இதனால் எம்.ஜி.ஆர்., இதைக் கவனித்து உடனே ஷுட்டிங்கை நிறுத்தச் சொல்லி இயக்குநரிடம் சௌகார் ஜானகி அணிந்திருக்கும் உடை குறித்துக் கூற, அடுத்த சில மணிநேரங்களில் அந்த உடையில் உள்ளே லைனிங் துணி வைத்த பின்னர் மீண்டும் ஷுட்டிங் நடத்தப்பட்டது.

அந்த அளவிற்கு உடன் நடிக்கும், நடிகைகளின் கண்ணியத்தினையும் காப்பாற்றி மனிதநேய மிக்க தலைவராகத் திகழ்ந்தவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.