இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் தமிழில் பல திரை நட்சத்திரங்களை அறிமுகம் செய்து உள்ளார். அதுமட்டுமின்றி கமல், ரஜினி உள்பட பல பிரபலங்களுக்கு அழுத்தமான கேரக்டர்கள் கொடுத்து தமிழ் சினிமாவில் பல மாஸ் நடிகர்களை அவர் தான் மெருகேற்றியுள்ளார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் ஏற்கனவே ஒரு சில மலையாளத் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை சித்தாராவை தமிழுக்கு புதுப்புது அர்த்தங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் கொண்டுவந்தது கே பாலசந்தர் தான்.
அதன் பிறகு சித்தாராவுக்கு பல வெற்றி திரைப்படங்கள் கிடைத்தது. ரகுமான், கீதா நடித்த புதுப்புது அர்த்தங்கள் என்ற திரைப்படத்தில் சித்தாரா மிக அருமையாக நடித்திருப்பார். அவரது நடிப்பை பார்த்து தான் அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. புது புது அர்த்தங்கள் பெற்ற வெற்றியை அடுத்து அவருக்கு விக்ரமன் இயக்கத்தில் உருவான புது வசந்தம் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதயம் படத்தில் அறிமுகம்.. காதல் கோட்டை படத்தில் அசத்தல்.. எழுத்தாளராக மாறிய நடிகை ஹீரா..!
முரளி, ஆனந்த்பாபு, ராஜா, சார்லி என நான்கு நண்பர்களுக்கு தோழியாக சித்தாரா நடித்திருந்தார். அந்த காலத்தில் நான்கு இளைஞர்களுக்கு தோழியாக நடிப்பதில் இருந்த ரிஸ்க்கை புரிந்து கொண்டு அவர் தனது கேரக்டரை மெருகேற்றி மக்கள் மனதில் பதிய வைத்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சுரேஷ் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து நடிகை சித்தாராவுக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான படையப்பா திரைப்படத்தில் அவர் ரஜினிகாந்த் தங்கையாக நடித்திருந்தார். இதனை அடுத்து மனுநீதி, முகவரி, திருநெல்வேலி, பூஜை உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு நாகேஷ் திரையரங்கம் என்ற திரைப்படத்தில் அவர் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அம்மாவாக நடித்திருந்தார்.
பாலியல் தொழிலாளி கதாபாத்திரம்.. துணிந்து நடித்த நடிகைகள்..!!
நடிகை சித்தாரா தமிழ் மட்டுமின்றி கன்னடம் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்ததோடு தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். சித்தாரா நடிப்பில் உருவான கங்கா யமுனா சரஸ்வதி என்ற தொலைக்காட்சி தொடர் ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. மூன்று வருடங்கள் இந்த தொடர் ஒளிபரப்பானது.
அதன் பிறகு ஆசியாநெட் டிவி, சூர்யா டிவி, கைராலி டிவியில் மலையாள தொடர்களில் நடித்த நடிகை சித்தாரா ஜெயா டிவியில் ஒளிபரப்பான காவேரி மங்கை ராஜ் டிவியில் ஒளிபரப்பான ஆர்த்தி, வசந்த் டிவியில் ஒளிபரப்பான பராசக்தி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்தார். இவ்வாறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்கள் நடித்துக் கொண்டிருந்த சித்தாரா திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்தார்.
5 வயது முதல் நடிப்பு.. 45 ஆண்டுகளில் 750 படங்கள்.. நடிகை சண்முகப்பிரியாவின் திரையுலக பயணம்..!
சிறுவயதிலேயே தனது தந்தை காலமானதை அடுத்து தனது இரண்டு சகோதரர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டதால்தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் இப்போது உங்களுக்கு ஒரு நல்ல ஜோடி கிடைத்தால் திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டபோது கண்டிப்பாக செய்து கொள்ள மாட்டேன் என்று அவர் தெரிவித்தார்.