நடிகை சீதா புதிய பாதை படத்தில் நடித்து நடிகர் பார்த்திபனைக் கரம் பிடித்தார். அவருடன் வாழ்ந்து வந்த சீதா கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகள் கழித்து விவாகரத்து ஆனார். இந்தத் தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
அதன்பிறகு தனது 43வது வயதில் சீரியல் நடிகர் சதீஷைத் திருமணம் செய்தார். 6 ஆண்டுகள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆனார். தாயுடன் சந்தோஷமாக இருந்து வருகிறார். தோட்டங்களைக் கவனித்துக் கொள்கிறார்.

வாழ்க்கையில் எத்தனையோ தடைகள் வந்தாலும் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாது மனதை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்கிறார். ஆரம்ப காலகட்டங்களில் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து வந்தார். கமலுடன் இவர் நடித்த உன்னால் முடியும் தம்பி இவருக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தது. அந்தப் படத்தில் வரும் இதழில் கதை எழுதும் பாடலில் இவர் பிரமாதமாக நடித்திருப்பார்.

தொடர்ந்து பல வெற்றிப்படங்களை நடித்தார். இடையில் பக்திப்படங்களில் நடித்துத் தாய்க்குலங்களைக் கவர்ந்தார். சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு இவர் பேட்டி கொடுத்த போது விஜய், அஜீத்துடன் நடித்த தனது அனுபவங்கள் குறித்து இவ்வாறு சொல்கிறார்.
மதுர படத்தில் விஜய் கூட நடிச்சேன். அவர் குழந்தையா இருக்கும்போது பார்த்தேன். இப்பவும் காலேஜ் பையன் மாதிரி இருக்கார். ராஜநடை படத்தில எஸ்.ஏ.சி சார் தான் டைரக்டர். குட்டிப்பையனா அவங்க அப்பா கூட வருவாரு. இப்படி வருவாரு. அப்படியே ஓடிப் போயிடுவாரு. ஒரு இடத்துல நிக்கவே மாட்டாரு.

டான்ஸ், பைட் கத்துக்கிட்டு தீவிரமா ஆக்ட் பண்ணனும்கற இன்ட்ரஸ்ட் அவருக்கு சின்ன வயசுல இருந்தே உண்டு. அவரும் அதே மாதிரி டெவலப் ஆகிட்டாரு. ரொம்ப கொயட்டா இருப்பாரு. சூட்டிங்க் ரெடின்னா அப்படியே மாறிடுவாரு. குட்டிப்பையன் இன்னைக்கு இவ்ளோ பெரிய ஸ்டாரா இருக்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

அஜீத் ரொம்ப நல்லா ஜாலியா பேசுவாரு. ஆஞ்சநேயா, பரமசிவம்னு ரெண்டு படங்கள்ல நடிச்சிருக்கேன். நியை பேருக்கு நிறைய நல்லது பண்றாரு. ஆஞ்சநேயா படத்துல நான் இறந்து போற மாதிரி சீன். அவரு வந்து ஆபீசர். ஓடி வந்து என்னைக் கட்டிப்பிடிச்சு அழணும். அவரு அழறது எனக்கு அழுகையா வருது. அவருக்கு வந்து என்னைப் பிடிச்சி அழும்போது மூவ்மெண்ட்ஸ் தெரிது. ஆனா எப்படியோ மேனேஜ் பண்ணிட்டாரு. அதுக்கப்புறம்… ஏம்மா அழுதீங்களா…. எனக்கு அழுகை வருதுன்னேன்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


