ரஜினி நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் படையப்பா. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை செளந்தர்யா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், நிழல்கள்ரவி, ராதாரவி போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர். பெண் வில்லியாக ரம்யா கிருஷ்ணன் இப்படத்தில் மிகசிறப்பாக நடித்திருந்தார்.
இப்படத்தில் ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரம் மக்களை மிகவும் கவர்ந்தது. அப்புறம் ரஜினிகாந்த் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?.. வழக்கம்போல் இப்படத்திலும் இவர் தனது நடிப்பினை மிகச்சிறப்பாக வெளிக்காட்டியிருப்பார். இப்படத்தின் ரஜினிக்கு தந்தையாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்தார்.
தளபதிக்குப் பின் மம்முட்டியை ஒதுக்கிய ரஜினி… மீண்டும் இணைய மறுத்த கூட்டணி… எந்தப் படத்தில் தெரியுமா?
என்னதான் பழைய நடிகராக இருந்தாலும் இந்த கால நடிகர்களுடன் ஈடுகட்டி நடிக்கும் திறமை கொண்டிருந்தவர் நடிகர் சிவாஜி. இப்படத்திலும் தந்தை கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் அழுதால் மக்களும் அழுவர். அந்த அளவு இவர் தனது நடிப்பினை வெளிக்காட்டியிருந்தார். இதுவே இவர் நடித்த கடைசி திரைப்படம்.
மேலும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு தாயாக நடிகை சத்யபிரியா நடித்திருந்தார். இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பணக்காரன், நல்ல காலம் பொறந்தாச்சு போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். மேலும் பல சின்னத்திரை சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.
கோலங்கள், வம்சம் போன்ற பல சீரியல்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது கூட சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகிக்கு மாமியாராகவும் ஆதி குணசேகரனுக்கு தாயாகவும் நடித்து கொண்டிருக்கிறார். எதார்த்தமான நடிப்பினால் இவர் பல ரசிகர்களையும் சம்பாதித்துள்ளார். இவர் முதலில் படையப்பா படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சரோஜா தேவியை அழவைத்த பெண்… ஒரே வார்த்தையில் அபிநய சரஸ்வதியை சிரிக்க வைத்த நம்பியார்…
பின் பல நாட்கள் ஆகியும் இவரை படபிடிப்புக்கு அழைக்கவே இல்லையாம். காரணம் தெரியாமல் குழப்பத்தில் இருந்துள்ள இவர் பின் இயக்குனருக்கு கால் செய்து இன்னும் தன்னை அழைக்கவில்லையே என கேட்டுள்ளார். அதற்கு கே.எஸ்.ரவிகுமார் இல்லை உங்கள் கதாபாத்திரம் இப்படத்தில் இல்லை. அதற்கு பதிலாக ராதாரவியை நீலாம்பரிக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கவிருக்கிறோம் என கூறியுள்ளார்.
அதிர்ச்சியான சத்யபிரியா இல்லை சார்… நான் அனைவரிடமும் பந்தாவாக கூறிவிட்டேன்… நான் இப்படத்தில் நடிக்க போகிறேன் என்று… அதனால் இதில் நான் நடிக்காவிட்டால் எனக்கு அசிங்கமாகிவிடும்… என கூறியுள்ளார். மேலும் தனக்கு ஒரு சிறிய கதாபாத்திரமாவது கொடுக்குமாறு கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்டுள்ளார். பின் இயக்குனரும் பின் நீலாம்பரியின் அம்மா கதாபாத்திரத்தை அவருக்கு கொடுத்துள்ளார். இதனை சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகுமாரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல உதவிகள் செய்த சிவாஜி கணேசன்!