சரோஜா தேவியை அழவைத்த பெண்… ஒரே வார்த்தையில் அபிநய சரஸ்வதியை சிரிக்க வைத்த நம்பியார்…

தமிழ் சினிமாவில் அக்காலம் முதல் இக்காலம் வரை கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். பல கதாநாயகிகள் சினிமாவில் வந்து சென்றாலும் ஒரு சில கதாநாயகிகளை நாம் இன்று வரை மறப்பதில்லை. அந்த அளவு சினிமாவில் அவர்களின் பங்கு இருந்திருக்கும்.

அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர்தான் சரோஜாதேவி. இவர் தமிழில் நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின் கல்யாண பரிசு, குடும்ப விளக்கு, தாய் சொல்லை தட்டாதே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தனது திறமையான நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். அந்த கால இளைஞர்கள் அனைவருக்கும் கனவுகன்னியாக இருந்தவர் சரோஜா தேவி. இவர் அக்கால நடிகர்கள் மட்டுமல்லாமல் இக்கால நடிகர்கள் வரை அனைவருடனும் நடித்துள்ளார். ஒன்ஸ்மோர், ஆதவன் திரைப்படங்களின் மூலம் இவர் இக்கால நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

சிவாஜி மட்டுமல்ல.. கே பாலசந்தரின் ஒரே படத்தில் நடித்தவர் சரோஜாதேவியும் தான்.. தாமரை நெஞ்சம் படத்தின் கதை..!

இவர் தமிழை உச்சரிக்கும் விதம் அனைவரையும் கவரும். மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பொதுவாக இவருக்கு எம்ஜிஆர் என்றால் ஏகப்பிரியம். அவருடன் இணைந்து அன்பே வா, நாடோடி, எங்கவீட்டு பிள்ளை போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அந்தகாலத்தில் எந்தவொரு படம் வெற்றி பெற்றாலும் ஒவ்வொரு ஊருக்கும் சென்று மக்களுக்கு நன்றி சொல்வது வழக்கம். சரோஜா தேவி மற்றும் எம்ஜிஆர் இணைந்து நடித்த திரைப்படம்தான் எங்க வீட்டு பிள்ளை. இப்படம் அந்த காலத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் நாகேஷ், நம்பியார், தங்கவேலு போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்தின் 25 நாள் வெற்றியை கொண்டாடுவதற்கு படத்தில் நடித்த அனைவரும் மதுரைக்கு சென்றுள்ளனர்.

எம்.ஜி.ஆருக்கு பயந்த நம்பியார்… களத்துல இறக்கி வேடிக்கை பார்த்த பாக்கியராஜ்….

அங்கு மக்களை சந்தித்தபின் அனைவரும் தியேட்டருக்கு வெளியே வந்து நின்றுள்ளனர். அப்போது அவர்களை பார்த்து கொண்டிருந்த சிறுமி ஒருவர் வேகமாக ஓடி வந்து சரோஜாதேவியின் கன்னத்தில் கடித்துவிட்டு ஓடிவிட்டாராம். அப்போது அவர் அழ ஆரம்பித்துள்ளார். அப்போது எம்ஜிஆர் தன்னுடன் அழைத்துவந்த மருத்துவரிடம் கூறி சரோஜா தேவியை சோதித்து பார்க்க சொல்லியிருகிறார்.

அப்போது மருத்துவரும் பார்த்துவிட்டு லேசான கடிதான்…பயப்படுவதற்கு ஒன்னும் இல்லை.. என கூறிவிட்டாராம். பின் அங்கிருந்த எம்.என்.நம்பியார் போயும் போயும் சரோஜாதேவியையா அப்பெண் கடித்தார். அப்பெண்ணை அழைத்து வாருங்கள், எனது கன்னத்தை கடிக்க சொல்லலாம் என நக்கலடித்துள்ளார். உடனே அழுது கொண்டிருந்த சரோஜா தேவி சிரித்துவிட்டாராம். தன்னுடைய ஒரு வார்த்தையில் அழுத சரோஜாதேவியை சிரிக்க வைத்துள்ளார் நம்பியார்.

பேரறிஞர் அண்ணா சொன்ன தகவல்… மெய்சிலிர்த்த எம்ஜிஆர்… அப்படி என்னதான் நடந்தது?

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...