சாதாரணமாக நடிகைகள் என்றாலே கொஞ்சமும் மேக்கப் குறையாமல் தான் இருப்பார்கள். கூடவே ஒரு டச்சப் நபரையும் உடன் வைத்துக் கொண்டு அவ்வப்பொழுது தனது அழகு குறையாமல் மேக்கப்புடன்தான் வெளியே வருவார்கள். ஷுட்டிங் ஸ்பாட்டிலும் இப்படித்தான். நடிகைகளுக்கு மார்க்கெட் என்பதே அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் வரை தான்.
அதன்பின் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அடுத்த முகத்தைத் தேடிச் செல்கின்றனர். இப்படி அழகு குறையாமல் மேக்கப்புடனே வலம் வரும் நடிகைகளுக்கு மத்தியில் ஒரு பிரபல நடிகை திருத்தணி முருகன் கோவிலுக்கு தனது முடியைக் காணிக்கையாகக் கொடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றியிருக்கிறார்.
காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனவர்தான் நடிகை சரண்யா. இதில் சந்தியாவின் தோழியாக படம் முழுக்க வருவார். இந்தப் படத்திற்குப் பின் ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே நல்ல பெயரைப் பெற்றுத் தந்த நிலையில் தொடர்ந்து தெலுங்கு உள்ளிட்ட பல மொழி வாய்ப்புகள் வந்தன. தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த சரண்யா சொந்தத் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.
வழுக்கைத் தலை போதும்.. அப்படியே வாங்க.. சிங்கம்புலிக்கு எகிறும் மார்க்கெட்
இதனிடையே அண்மையில் திருத்தணி முருகன் கோவிலில் தனது முடியைக் காணிக்கையாக் கொடுத்து மொட்டை அடித்திருக்கிறார். இதுபற்றி அவரே தனது இன்ஸ்டாபக்கத்தில் வெளியிட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு தான் மொட்டையடித்து, அலகு குத்தியதாகவும், தனது கடமையை நிறைவேற்றிவிட்டேன் என்றும் கூறியுள்ளார்.
எத்தனையோ நடிகைகள் சிறு முடி நரைத்தாலும் கூட உடனடியாக டை அடித்து, விக் வைத்து தங்கள் அழகைப் பேணி வரும் வேளையில், ஆழ்ந்த இறை நம்பிக்கை கொண்டு என்னையே தந்து விட்டேன் கந்தனிடமே என்ற ஹேஷ்டேக்கைப் போட்டு தான் முடி காணிக்கையாகச் செலுத்தி மொட்டை அடித்ததை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் சரண்யா. தற்போது சரண்யா சென்னை வடபழனியில் எடிட்டிங் ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் இவர் இதுவரை திருமணமும் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.