வாழ்க்கையோட 100 சதவீத உண்மை இதுதாங்க… இவரா இப்படி சொல்றாரு…

இப்ப எல்லாம் நடிகருங்க ஆளாளுக்குத் தத்துவம் பேச ஆரம்பிச்சிட்டாங்க. கொஞ்ச வயசுலயே வாழ்க்கையோட உண்மையை உணர ஆரம்பிச்சிட்டாங்க. அந்த வகையில் நடிகர்கள் சிலர் என்னென்ன சொல்றாங்கன்னு பாருங்க. கவின்: எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம…

kavin, manikandan, mime gopi

இப்ப எல்லாம் நடிகருங்க ஆளாளுக்குத் தத்துவம் பேச ஆரம்பிச்சிட்டாங்க. கொஞ்ச வயசுலயே வாழ்க்கையோட உண்மையை உணர ஆரம்பிச்சிட்டாங்க. அந்த வகையில் நடிகர்கள் சிலர் என்னென்ன சொல்றாங்கன்னு பாருங்க.

கவின்: எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம நாம இருக்குறதுதான் உண்மையான நட்புன்னு நான் நினைக்கிறேன். நண்பேன்னா என்னோட கஷ்டத்தைப் புரிஞ்சி கேட்காமலேயே அவனே பண்ணிடுவான். இவன்கிட்ட நான் நண்பனா இருந்தா இது எல்லாம் நடக்கும்னு இருந்தா அது நட்பு கிடையாது என்கிறார் கவின்.

மணிகண்டன்: நான் சீக்கிரமா பெரிய ஆள் ஆகணும்னு சினிமாவுல வேலை செஞ்சா எதுவுமே நடக்காது. நீங்க வேலை செஞ்சிட்டு இருக்குறது நிஜமாவே உங்களுக்கு முதல்ல பிடிக்கணும். அதுக்கு ரெடியா இருந்தா மட்டும்தான் முடியும். பலனை எதிர்பார்த்து வேலை செய்யக்கூடாது.

நான் என் நண்பன் கிட்ட சொல்லுவேன். சினிமாவுல பெரிய ஆள் ஆகணும்னு ஆசை இல்ல. நான் ஆசைப்பட்ட சினிமாவுல இருக்குறதே பெரிய விஷயம். படம் வெற்றி ஆகுறது ரெண்டாவது. ஆனா படத்துல இருக்கோம். அப்படிங்கறதே பெரியவெற்றிதான் என்கிறார் மணிகண்டன்.

மைம் கோபி: நீ என்ன பண்ணாலும் உன்னால எதையும் தூக்கிட்டுப் போக முடியாது. குழில புதைக்கும்போது மேல மண்ணு போட்டு மூடுவாங்க. அது கூட தெரியாது. மண்ணு சாப்பிடுற உடம்பை வச்சிக்கிட்டு இருக்கோம். தொண்டைக்குக் கீழே வெறும் கழிவு வச்சிக்கிட்டு இருக்கோம். நாறுற உடம்பை வச்சிக்கிட்டு இருக்கோம். இதுக்கு நடுவுல நான்தான் பெரியவன்னு சொல்லிட்டு இருக்க. மேல ஒருத்தன் இருக்கான். அவன் தான் பெரியவன் என்கிறார் நடிகர் மைம் கோபி.