ரயில் பயணிகளுக்கு நற்செய்தி… வந்தாச்சு SwaRail செயலி… அதை பற்றிய முழு விவரங்கள் இதோ…

இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள். ரயில்வே பயணிகளின் வசதிக்கேற்ப இந்திய ரயில்வே ஆனது புதுப்புது திட்டங்களை கொண்டு வருகிறது. தற்போது அதுபோல ரயில்வே பயணிகளுக்கு ஒரு நற்செய்தி இருக்கிறது.…

Swarail

இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள். ரயில்வே பயணிகளின் வசதிக்கேற்ப இந்திய ரயில்வே ஆனது புதுப்புது திட்டங்களை கொண்டு வருகிறது. தற்போது அதுபோல ரயில்வே பயணிகளுக்கு ஒரு நற்செய்தி இருக்கிறது. அது என்னவென்றால் இந்திய ரயில்வே SwaRail என்ற புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது எதற்காக பயன்படுகிறது என்பதை பற்றிய விவரங்களை இனி காண்போம்.

இந்திய ரயில்வே பொதுமக்களுக்கு அனைத்து ரயில் சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் படியாக தற்போது SwaRail என்ற புதிய செயலியை கொண்டு வந்து இருக்கிறது. இதுவரை பொதுமக்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு, முன்பதிவு நிலை அறிதல் போன்ற சேவைகளைப் பெற IRCTC தளத்தை பயன்படுத்தி வந்தார்கள். அதேபோல் ரயில் எங்கே வந்து கொண்டிருக்கிறது என்பதை வேறு ஒரு இணையத்தின் மூலம் கண்டறிந்து கொள்ள வேண்டியிருந்தது.

தற்போது இந்த SwaRail செயலி பயணிகளின் சிரமத்தை குறைத்துள்ளது. அதாவது இந்த செயலி முன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் பிளாட்பாரம் முன்பதிவு, பார்சல் முன்பதிவு, ரயில்வே அட்டவணை விவரங்கள், ரயில் எங்கே வருகிறது என்பதை டிராக் செய்வது, உணவு ஆர்டர் செய்வது, இருக்கை கிடைப்பதை சரி பார்ப்பது, புகார்களை பதிவு செய்வது போன்ற பல சேவைகளை ஒரே இடத்தில் இந்த செயலி மூலம் செய்து கொள்ள முடியும். இனிமேல் ரயில் பயணிகள் தனித்தனியாக ஒவ்வொரு சேவையையும் தேடி அலைய வேண்டியதில்லை. இந்த SwaRail செயலிக்கு மக்கள் வரவேற்பு அளித்திருக்கிறார்கள்.