15 வருட திரையுலக வாழ்க்கை.. ஏமாற்றமே மிச்சம்.. 56 தூக்க மாத்திரை போட்டு தற்கொலை செய்த நடிகை..!

By Bala Siva

Published:

15 வருடங்கள் திரையுலகில் தமிழ் தெலுங்கு கன்னடம் உட்பட பல மொழிகளில் நடித்தும் அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றம் காரணமாக 35 வயதில் தற்கொலை செய்து கொண்ட நடிகை தான் கல்பனா.

நடிகை ஊர்வசியின் அக்கா கல்பனா என்பது தெரியும். ஆனால் அதே பெயரில் கடந்த 1960களில் ஒரு நடிகை இருந்தார். கர்நாடக மாநிலம் மங்களூரில் இவர் 1943 ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதிலேயே இவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் உள்ளதை எடுத்து அவர் தற்செயலாக பிரபல இயக்குனர் பி ஆர் பந்தலு கண்ணில் பட்டார். இதனை அடுத்து அவர்தான் இவரை திரையுலகத்திற்கு அழைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1963 ஆம் ஆண்டு தனது 20 வது வயதில் பிஆர் பந்துலு இயக்கத்தில் உருவான கன்னட படத்தில் நடித்தார்.  இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவருக்கு ஏராளமான கன்னட மற்றும் மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் அவர் ’கர்ணன்’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு  தமிழில் அவர் நடித்தது சில படங்கள் தான்.

குறிப்பாக மெட்ராஸ் டு பாண்டிச்சேரி என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரிலும் சாதுமிரண்டால் என்ற கேரக்டரில் கல்பனா என்ற கேரக்டரில் நடந்திருப்பார். இந்த இரண்டு படங்களை அவருக்கு நல்ல முறையில் கை கொடுத்தது. இதனை அடுத்து அவர்  1967 ஆம் ஆண்டு வெளியான ஜெமினி கணேசன் நடித்த ’பட்டத்து ராணி’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இதனை அடுத்து கன்னட திரை உலகில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்தார் என்பதும்  கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் அவர் தமிழ் பக்கமே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

kalpana1

1973 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன் நடித்த ’கட்டிலா தொட்டிலா’ என்ற திரைப்படத்தின் மூலம் அவர் தமிழுக்கு ரீ என்ட்ரி ஆனார். இந்த படம் கூட கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆன படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர்  ’தென்னங்கீற்று’ என்ற தமிழ் படத்தில் நடித்த நிலையில் அதன் பிறகு அவர் தமிழில் நடிக்கவில்லை.

கடந்த 1978 ஆம் ஆண்டு ஒரு ’அனுராகா பந்தனா’ என்ற கன்னட படத்தில் நடித்தது அவரது கடைசி படமாக அமைந்தது. நடிகை கல்பனா திரை உலகில் நல்ல திருப்தியான கேரக்டர்கள் பெற்றாலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள் குறிப்பாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட அவர் அதிலிருந்து மீள முடியாமல் கஷ்டப்பட்டார். மேலும் அவரது குடும்ப வாழ்க்கையும் சரியாக அமையவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்  தனது 1979 ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அவர் 56 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்டது.

அவரது கடைசி வாழ்க்கை பெரும் ஏமாற்றமாக இருந்தது என்றும் உடல்நல குறைவு பொருளாதார பற்றாக்குறை மற்றும் காதல் தோல்வி ஆகியவை அவரது மனதை தளர்வடையச் செய்ததாக அவருடைய நெருங்கிய உறவினர்கள் கூறியுள்ளனர்.