14 வயதில் சினிமாவில் அறிமுகம்.. முதல் படத்தில் வசனமே இல்லை.. நடிகை இளவரசியின் வாழ்க்கைப்பயணம்..!

By Bala Siva

Published:

தமிழ் திரை உலகில் 14 வயதில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான இளவரசி அந்த படத்தில் வசனமே இல்லாமல் வெறும் உணர்ச்சிகரமான பாவனைகளை மட்டுமே முகத்தில் காட்டி இருப்பார். அந்த படம் தான் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா நடித்த வாழ்வே மாயம். அதன் பின் அவர் பல திரைப்படங்களில் நாயகியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் நடித்தார்.

நடிகை இளவரசி சென்னையைச் சேர்ந்தவர். இவரது தந்தை திரைத்துறையில் பணி செய்தவர். சிறுவயதிலேயே நடனம் நாட்டியம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டு இருந்த இவர் தந்தையின் பின்புலம் காரணமாக மிக எளிதில் சினிமாவிற்குள் வந்துவிட்டார். கடந்த 1982 ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ஸ்ரீ பிரியா நடித்த வாழ்வே மாயம் என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் அறிமுகமானார்.

5 வயது முதல் நடிப்பு.. 45 ஆண்டுகளில் 750 படங்கள்.. நடிகை சண்முகப்பிரியாவின் திரையுலக பயணம்..!

இந்த படத்தில் அவர் ஒரு நோயாளியாகவும், அவருக்கு டாக்டர் ஜெய்சங்கர் வைத்தியம் பார்ப்பது போன்ற காட்சி இருக்கும். இந்த படத்தில் அவருக்கு ஒரு வார்த்தை கூட வசனம் இல்லை. அடுத்து அவர் கங்கை அமரன் இயக்கத்தில் உருவான கொக்கரக்கோ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அதன் பிறகு அவருக்கு ஒரு சில குணசித்திர கேரக்டர்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.

கமல்ஹாசன் நடித்த சட்டம், விஜயகாந்த் நடித்த வீட்டுக்கு ஒரு கண்ணகி, லட்சுமி நடித்த சிறை, சிவகுமார் நடித்த குவா குவா வாத்துக்கள், பாக்யராஜ் நடித்த தாவணி கனவுகள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவர் குணசேத்திர வேடத்தில் நடித்தார். சில படங்களில் அவர் இரண்டாவது நாயகியாக நடித்த நிலையில் தான் அவர் நாயகியாக நடித்த அவள் சுமங்கலி தான் என்ற படம் நல்ல வரவேற்பு பெற்றது.

கட்சிக்காக பணம் கொடுத்த நடிகை லதா… திருப்பி எம்ஜிஆர் செய்த உதவி..!!

விசு இயக்கத்தில் உருவான இந்த படத்தில் கார்த்திக் ஜோடியாக இளவரசி நடித்திருப்பார். அதன் பிறகு மோகன் நடித்த குங்குமச்சிமிழ் என்ற திரைப்படதில் நாயகியாக இளவரசி நடித்திருந்தார். இந்த படத்தை சுந்தர்ராஜன் இயக்கி இருந்தார். இதனை அடுத்து சம்சாரம் அது மின்சாரம், ஊமை விழிகள், தாய்க்கு ஒரு தாலாட்டு, சின்ன குயில் பாடுது உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். நடிகை இளவரசி, கோபால் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், திரை உலகில் இருந்து கிட்டத்தட்ட விலகினார். எப்போதாவது வரும் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார். தமிழில் அவர் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான பிரசாந்த் நடித்த குட்லக் திரைப்படத்திற்கு பிறகு நடிக்கவில்லை.

ஊமை விழிகள் திகில் பாட்டி.. கருணை உள்ளம் கொண்ட அம்மா நடிகை எஸ்.ஆர்.ஜானகி..!

நடிகை இளவரசிக்கு லக்ஷனா என்ற ஒரு மகள் இருக்கிறார். அவர் ஐடி துறையில் உயர் பதவியில் தற்போது இருக்கிறார். 14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்தில் வசனமே இல்லாமல் இருந்தாலும் அதன் பிறகு பல திரைப்படங்களில் தெளிவான வசனங்கள் பேசி தனது நடிப்பு முத்திரையை பதித்து இன்று குடும்ப தலைவியாக தனது குடும்பத்தினருடன் நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார் இளவரசி.