திரைப்படத்தில் நடித்தது போலவே மர்மமான முறையில் மரணம் அடைந்த கமல் பட நடிகை..!

Published:

திரைப்படத்தில் நடப்பது போலவே சில சமயம் உண்மையாகவும் நடக்கும் என்பதும் அதுவும் அந்த படத்தில் நடித்த நட்சத்திரங்கள் அதேபோன்ற சில அனுபவத்தை பார்ப்பார்கள் என்பதையும் பார்த்திருக்கின்றோம். அந்த வகையில் கமல்ஹாசன் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை மர்மமான முறையில் மரணமடைந்தது போன்ற கேரக்டரில் நடித்தது போலவே நிஜத்திலும் அவர் மர்மமான முறையில் மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த 2006 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’வேட்டையாடு விளையாடு’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படம் சமீபத்தில் கூட ரீரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

காதலித்து திருமணம்.. 26 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து… நடிகை லிசி வாழ்க்கையில் நடந்தது என்ன?

bidushi dash barde2

இந்த நிலையில் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் மகளாக ராணி என்ற கேரக்டரில் நடித்தவர் தான் நடிகை பிதுஷி தாஸ் பர்டே. மும்பையை சேர்ந்த இவர் பல அழகி போட்டிகளில் கலந்து கொண்டு உள்ளார். மிஸ் சென்னை போட்டியில் கூட இவர் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பெற்றார்.

இந்த பிரபலத்தின் மூலம் தான் அவருக்கு ’வேட்டையாடு விளையாடு’ என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன்பிறகு அவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்த நிலையில் பெற்றோர் பார்த்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து அவர் மும்பைக்கு தனது கணவருடன் சென்றார். அவரது கணவர் அலுவலகம் ஒன்றில் பணி செய்து கொண்டிருந்த நிலையில் ஒருநாள் அவர் அலுவலகத்தில் இருந்து திரும்பி வீட்டுக்கு வந்தபோது ரத்த வெள்ளத்தில் தனது மனைவி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

காதலித்து திருமணம்.. 26 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து… நடிகை லிசி வாழ்க்கையில் நடந்தது என்ன?

உடனடியாக அவர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை செய்தனர். அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்திருந்ததால் அவர் கொலை செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டது. போலீசார் விசாரணையில் அவரது வீட்டில் இருந்து அவசர அவசரமாக ஒருவர் வெளியே சென்றதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.

bidushi dash barde 1

இந்த நிலையில் தனது மனைவிக்கு பல ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருந்தது என்றும் அவ்வப்போது அவர் திடீரென சர்க்கரை அளவு குறையும்போது மயக்கம் போட்டு கீழே விழுந்து விடுவார் என்றும் தெரிவித்தார். இதனை பிதுஷி தாஸ் பர்டே தந்தையும் உறுதி செய்தார். தனது மகளுக்கு சிறுவயதில் இருந்தே சர்க்கரை நோய் இருந்தது என்றும் அவரது கணவர் கூறியது சரிதான் என்றும் கூறினார்.

அப்போதுதான் போலீசார் இது கொலை அல்ல சர்க்கரை நோய் காரணமாக அவர் தெரியாமல் தவறி விழுந்து இறந்திருப்பார் என்று இந்த கேசை முடித்துவிட்டனர். இருப்பினும் இந்த வழக்கு மர்மமாக இருப்பதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறி வருகின்றனர்.

விஜய்யை பெரிய ஹீரோவாக்கிய தயாரிப்பாளரால் சொந்த மகன்களை ஜெயிக்க வைக்க முடியாத சோகம்..!

‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்த நடிகை நிஜ வாழ்விலும் மர்மமான முறையில் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் உங்களுக்காக...