இது காரா இல்ல கேரவனா? விஜய் வாங்கிய சொகுசு காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா? விலை எவ்வளவு தெரியுமா?

By John A

Published:

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் நடிப்பினைத் தாண்டி நடனம், பாட்டு போன்றவற்றிலும் அசத்தி வருபவர். தளபதி விஜய்க்கு மற்றொரு பிடித்தமான விஷயம் என்னவெனில் டிரைவிங் செய்வது. தன்னிடம் உள்ள சொகுசு காரை எடுத்துக் கொண்டு லாங் டிரைவிங் போவது விஜய்க்கு மிகப் பிடித்தமான பொழுது போக்கு.

ஒவ்வொரு படத்திற்கும் கிட்டத்தட்ட 150 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் விஜய் நீலாங்கரையில் பிரம்மாண்ட சொகுசு பங்களாவில் வசித்து வருகிறார். மேலும் அவரிடம் பிஎம்டபிள்யூ, ஆடிகார், ரோல்ஸ் ராய்ஸ் போன்ற உயர்ரக கார்களும் வைத்துள்ளார்.

தற்போது அரசியல் பிரவேசம் எடுத்துள்ள விஜய் இனி தொடர்ச்சியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலை இருப்பதால் மற்றுமொரு புதிய சொகுசுகாரினை வாங்கியிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன் இந்தக் காரில் விஜய் அவர் வீட்டிலிருந்து பயணிப்பது போன்ற வீடியோ வெளியாகி அந்தக் கார் வைரல் ஆனது. அது என்னவகையான கார் என ஆட்டோமொபைல் பிரியர்கள் இண்டர்நெட்டை அலசத் தொடங்கினர்.தற்போது அந்தக் கார் பற்றிய முழுத் தகவலும் கிடைத்துள்ளது.

டொயோட்டா நிறுவனம் உயர்ரக சொகுசு கார்களை ‘லெக்சஸ்’ என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்தக் காரின் ஒரு மாடலான ‘லெக்சஸ் LM 350h’ காரைத் தான் விஜய் வாங்கியிருக்கிறார். இந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட்டபோதே புக்கிங் செய்திருந்த விஜய் இந்திய சந்தைக்கு வந்தவுடன் வாங்கியிருக்கிறார். விமானத்திற்கு இணையாக சொகுசினை அளிக்கும் இந்தக் கார் பெட்ரோல் மற்றும் மின்சாரத்திலும் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

காத்திருந்த பொறுமைக்குக் கிடைத்த பலன்.. 9 விருதுகளை அள்ளிய ஆடு ஜீவிதம் : கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு

‘லெக்சஸ் LM 350h’ 7 சீட்டர் மற்றும் 4 சீட்டர் என இரு வேரியன்டுகளில் கிடைக்கிறது. தற்போது விஜய் வாங்கியிருப்பது 4 சீட்டர் காரைத்தான். இந்தக் காரில் பின்புறம் அமர்ந்து என்ன பேசினாலும் முன்னால் இருப்பவர்களுக்குக் கேட்காத வகையில் பிரைவசி டோரைக் கொண்டுள்ளது. ஸ்லைட் வகை டோர் கொண்டுள்ள இந்தக் காரில் மிகப்பெரிய எல்இடி திரை, 23 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், காரைச் சுற்றிலும் 360 டிகிரியில் கேமரா ஆகிய வசதிகள் உள்ளன.

மசாஜர்,வெண்டிலேஷன்,சீட்டிங் ஆகிய வசதிகளும் பின்புறம்செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தக் காரில் பயணிக்கும் போது களைப்பாக இருந்தால் அப்படியே சீட்டை மினி பெட்டாகவும் மாற்றிக் கொள்ளலாம். இதுமட்டுமன்றி காரில் மினி பிரிட்ஜ் வசதி, வயர்லெஸ் சார்ஜர் போன்ற பல அட்வான்ஸ் தொழில்நுட்பங்களையும் கொண்டுள்ளது இந்த ‘லெக்சஸ் LM 350h’. விஜய் வாங்கியிருக்கும் இந்தக் காரின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2.5 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.