அழகர் கோவில் பதினெட்டாம் படி கருப்பண்ணசாமிக்கு ஆள் உயர அரிவாள்.. சிவகார்த்திக்கேயன் வழிபாடு

நடிகர் சிவகார்த்திக்கேயன் அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு ஆள் உயர அரிவாள் சாற்றி வழிபாடு நடத்தியுள்ளார். அமரன் பட வெற்றிக்குப் பிறகு தனது மனைவி ஆர்த்தியோடு வந்து கருப்பண்ணசாமிக்கு வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார் சிவகார்த்திக்கேயன். அழகர்கோவிலில்…

Sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திக்கேயன் அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு ஆள் உயர அரிவாள் சாற்றி வழிபாடு நடத்தியுள்ளார். அமரன் பட வெற்றிக்குப் பிறகு தனது மனைவி ஆர்த்தியோடு வந்து கருப்பண்ணசாமிக்கு வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார் சிவகார்த்திக்கேயன்.

அழகர்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி பலருக்கும் குல தெய்வமாக உள்ளது. நிறைய பேர் பதினெட்டாம்படியான் என்று பெயர் வைத்திருப்பார்கள். நீதிமன்றத்தால் தீர்க்கமுடியாத வழக்குகள் கூட கருப்பண்ணசாமி முன்பு தீர்க்கப்பட்டுள்ளது. கள்ளழகரின் காவல் தெய்வம் பதினெட்டாம்படி கருப்பசாமி.

மூடப்பட்ட கதவும் சாத்தப்பட்ட சந்தனமும்தான் கருப்பண்ணசாமியாக உள்ளார். கதவை திறந்தால் பதினெட்டு படிகள் இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அந்த கதவை திறந்து பதினெட்டு படிகளின் தரிசனம் கிடைக்கும். நாம் நினைத்த நல்ல காரியங்கள் நிறைவேற வேண்டும் என்றால் ஆள் உயர நிலை மாலை, சந்தனம் சாற்றுவதாக வேண்டிக்கொள்ளலாம். நிறைய பேர் 5 அடி உயர அரிவாள் சாற்றுவதாக வேண்டிக்கொள்வார்கள்.

நடிகர் சிவகார்த்திக்கேயன் ஞாயிற்றுக்கிழமை அழகர்கோவிலுக்கு தனது மனைவி ஆர்த்தியோடு வந்து அங்குள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமியை வழிபட்டார். அப்போது ஆள் உயர அரிவாளை கருப்பண்ணசாமிக்கு படைத்ததோடு நிலைமாலையும் சாற்றினார். அப்போது கோவிலில் இருந்த அர்ச்சகர்கள் சிவகார்த்திக்கேயனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

கோவிலை விட்டு வெளியே வந்த சிவகார்த்திக்கேயனுடன் அங்கிருந்த ரசிகர்கள் பலரும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். ரசிகர்களின் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திக்குமுக்காடிப்போனார் சிவகார்த்திக்கேயன்.