ரஜினியாக மாறப்போகும் சிம்பு; அடுத்த பட பட்ஜெட் மட்டும் இவ்வளவு கோடியா?

Published:

சிம்புவின் அடுத்தப் படத்தை தேசிங்பெரியசாமி இயக்க ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு வெற்றிகரமாக தனது செகன்ட் இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’, வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ ஆகிய படங்கள் வெற்றி அடைந்தன. இருப்பினும் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று, தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து வரும் மார்ச் 30ம் தேதி ‘பத்துதல’ திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் சிம்புவின் அடுத்த படத்தை இயக்க உள்ளது யார்? படத்தின் பட்ஜெட் எவ்வளவு? போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. சிம்புவின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ், மிஷ்கின் ஆகியோர் இயக்க உள்ளதாக பேச்சு அடிப்பட்ட நிலையில், தற்போது தேசிங்கு பெரியசாமி கதைக்கு சிம்பு ஓ.கே. சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துல்கர்சல்மான் நடிப்பில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். மேலும் தனது அடுத்த படத்திற்கு கதையை தயார் செய்யும் படி அவரிடம் ரஜினி கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. ரஜினி நடிக்க AGS தயாரிக்க தேசிங்பெரியசாமி இயக்குவதாக இருந்த படம் படத்தின் பட்ஜெட்டால் ட்ராப்பானதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சிம்புவின் அடுத்தப் படத்தை தேசிங்பெரியசாமி இயக்க ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினிக்காக தயாரித்த கதையை சிம்புவுக்கானதாக தேசிங்கு பெரியசாமி மாற்றியுள்ளதாகவும், படத்தின் பட்ஜெட் மொத்தம் நூறு 100 என்றும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் உங்களுக்காக...