சிரிப்பால் கொள்ளை கொண்ட அழகி இவர். கண்களால் வசியம் செய்யும் வசியக்காரி. இளம் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் அழகு பதுமை. இவர் பார்வையால் இளம் நெஞ்சங்களைத் தவிக்க விட்டவர். அவர் யார் தெரியுமா? நடிகை சாய்பல்லவி. இவரது வாழ்க்கைக் குறிப்புகளைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
சிவப்பு அழகு க்ரீமுக்கு விளம்பரம் செய்யச் சொல்லி அழைப்பு வந்த போதும் மறுத்து விட்டார் சிவப்பழகு நடிகை தான் சாய்பல்லவி.
தனுஷ் உடன் ஒரு பாடலுக்குப் போட்டாரே ஒரு குத்தாட்டம். அதை இன்றும் யாரும் மறக்க முடியாது. குத்துன்னா குத்து அப்படி ஒரு குத்து. தனுஷ_க்கே டப் கொடுத்து ஆடினார் சாய்பல்லவி. அது தான் ரௌடி பேபி சாங்.
மலையாளத்திரை உலகில் அவர் பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் அங்கும் கொடிகட்டிப் பறந்தார்.
யதார்த்தமான வெகு நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். இந்தப் படம் 2015ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்து அசத்தியுள்ளார். தனுஷின் மாரி மற்றும் மாரி 2 படத்திலும் நடித்து அசத்தியுள்ளார்.
ஒரு கிரீமால் சிவப்பழகு கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. அதனால் தான் அந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்தேன் என்றும் சொல்லியிருக்கிறார். சாரங்கதரியா என்ற தெலுங்கு லவ் ஸ்டோரி ஆல்பத்திற்காக நாகசைதன்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்த சாய்பல்லவிக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பைத் தெரிவித்துள்ளனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக இவர் ஒரு டாக்டர் என்பதைப் பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஜார்ஜியாவில் தான் தனது மருத்துவப் படிப்பை முடித்துள்ளார். சிறுவயது முதலே டான்ஸ் ஆடுவதில் தனி ஆர்வம் இருந்து வந்தது. ஆனால் மேடை பயம் தான் தொடர்ந்தது. இதைப் போக்க அவரது அம்மா இவரை ஒரு சில டான்ஸ் ஷோக்களுக்கு அழைத்துச் சென்றார்.
இயக்குனர் லோகிதா தாஸ் 2005ல் வெளியான தனது கஸ்தூரி மான் படத்தில் சாய்பல்லவியை தமிழ்த்திரை உலகில் அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றினார். அடுத்ததாக இவர் தோன்றிய படம் தான் தாம் தூம். இவர் டான்ஸில் ஆர்வம் இருந்தபோதும் முறையாக டான்ஸ் கற்றுக் கொள்ளவில்லை.
ஐஸ்வர்யா ராய், மாதுரி தீட்சித் என புகழ்பெற்ற நடிகைகளின் டான்ஸைப் பார்த்துத் தான் கற்றுக் கொண்டாராம். இவரது முதல் டான்ஸ் நிகழ்ச்சி 2008ல் விஜய் டிவியில் வெளியான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சி தான்.
இவருக்கு பூஜா என்ற ஒரு தங்கையும் உண்டு. இவர் பிறந்தது நீலகிரி மாவட்டம் கோத்தகிரி. இருந்தாலும் படித்தது, வளர்ந்தது எல்லாமே கோயம்புத்தூர் தான்.
இன்று (மே.9) பிறந்தநாள் கொண்டாடும் சாய் பல்லவிக்கு நம்ம டீம் சார்பாக வாழ்த்துக்கள்.