பாரதிராஜாவின் படத்தில் நடித்து, கமல், ரஜினி படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்து குஷ்பூவுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்து அதன் பின் சினிமாவே வேண்டாம் என்று அதிலிருந்து விலகி தொழில் அதிபராகியுள்ள நடிகர் ராஜா குறித்து தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ராமநாயுடு மற்றும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியவர்களின் நெருங்கிய உறவினரான ராஜா அடிக்கடி சிறுவயதிலேயே படப்பிடிப்பை பார்க்க ஸ்டூடியோவுக்கு செல்வார். இருப்பினும் அவருக்கு நடிப்பில் நாட்டம் இல்லை என்றும் படிப்பில் மட்டுமே கவனம் இருந்தது என்றும் கூறப்பட்டது.
வரிசையாக 6 வெற்றி படங்கள்.. இளையராஜாவை பகைத்ததால் தொடர் தோல்வியால் துவண்ட தயாரிப்பாளர்!
ஆனால் விதியின் வசத்தால் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ‘பாக்கு வெத்தல’ என்ற திரைப்படத்தில் அவர் ஒரு நடிகராக அறிமுகமானார். சின்ன முள் பெரிய முள், நெஞ்சில் துணிவிருந்தால், கண்ணே ராதா, வீட்டுக்கு ஒரு கண்ணகி ஆகிய திரைப்படங்களில் நடித்தாலும், நடிகர் ராஜாவுக்கு பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் திரைப்படத்தில்தான் அவருக்கு திருப்புமுனை ஏற்பட்டது.
இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தாலும் ராஜா தான் நாயகன். இதனை அடுத்து வேதம் புதிது என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்த நிலையில் பல படங்களில் அவர் நடித்தார்.
குறிப்பாக ரஜினிகாந்தின் மாப்பிள்ளை திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். அதேபோல் கமல்ஹாசனின் சதிலீலாவதி படத்திலும் ஒரு சிறு கேரக்டரில் நடித்தார்.
இந்த நிலையில் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு வெளியான கேப்டன் மகள் என்ற திரைப்படத்தில் குஷ்பூ காதலனாக நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
எம்ஏ தேர்வு எழுத வேண்டாம் என கூறிய இளையராஜா.. சின்னக்குயில் சித்ரா எடுத்த முடிவு..!
இந்த நிலையில் 2000ஆம் ஆண்டு வரை தமிழ் திரை உலகில் நடித்துக் கொண்டிருந்த ராஜா அதன்பின் சினிமாவே வேண்டாம் என்று சொந்த தொழில் செய்ய சென்று விட்டார். சென்னையில் இப்போதும் அவர் கிரானைட் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் என்டி பாலகிருஷ்ணாவின் அழைப்பின் பேரில் என்டி ராமராவ் வாழ்க்கை வரலாறு படமான ‘என்டிஆர் கதாநாயகுடு’ என்ற திரைப்படத்தில் பிரபல தயாரிப்பாளர் திரிவிக்ரம ராவ் கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பிறகு விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த ‘ஆதித்ய வர்மா’ என்ற படத்தில் அப்பா கேரக்டரில் நடித்தார்.
தமிழ் திரையுலகில் நல்ல வசீகரமான தோற்றம், ரொமான்ஸ் நாயகனுக்கு ஏற்ற கேரக்டர்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பெற்று இருந்த ராஜா தற்போது நடிப்பில் இருந்து விலகி இருந்தாலும் இதுவரை அவர் நடித்த படங்கள் ரசிகர்களின் மனதில் எப்போதும் இருக்கும்.